Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனிக்கு ஓவர் குசும்புங்க.. சும்மா நின்ற தீபக் சாஹரிடம் செய்த லூட்டி.. இந்த வீடியோவை பாருங்க

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் டெல்லி சிஎஸ்கே அணி மோதிய ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

இந்த நிலையில் டாஸ் வீசும்போது தோனி செய்த காரியம் ஒன்று ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தோனி எப்போதுமே மற்ற வீரர்களிடம் செல்லமாக விளையாடுவார். பில்டிங்கில் யாரேனும் தவறு செய்தால் கடுமையாக தோனி திட்டுவது வழக்கம்.

MS Dhoni Playing with Deepak chahar attracts fans during csk vs dc match

அவ்வப்போது செல்லமாக குழந்தைகளிடம் விளையாடுவது போல் சேட்டைகளையும் களத்தில் செய்வார். அப்படித்தான் தீபக்சாகர் மீது தோனிக்கு கொள்ளை பிரியம் போல. ஏற்கனவே ஒரு ஆட்டத்தில் தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் போது தீபக்சாகரின் முகம் வரைக்கும் பேட்டை கொண்டு சென்று விளையாடினார்.இதனை பார்த்து பயந்து தீபக்சாகர் அந்த இடத்தை விட்டு ஓடி சென்றார்.

இந்த நிலையில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் போது தீபக்சாகர்பிராவோவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தோனி தீபக்சாகரை கன்னத்தில் அறைவது போல் சென்று சேட்டை செய்தார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத தீபக்சாகர் முதலில் அதிர்ச்சியானாலும் பின்னர் சிரித்தார். தோனியின் இந்த சேட்டை வீடியோ தற்போது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு சிலர் இது தோனி கோபத்தில் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர். உண்மையிலே தீபக்சாகரை அடித்து இருப்பார் என்று விமர்சித்தும் வருகிறார்கள். தீபக்சாகர் இத்தனை கோடி வாங்கிவிட்டு பல போட்டிகளில் விளையாடாமல் போனதால் தோனி இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவர்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள். எனினும் முக்கிய கட்டத்தில் தீபக்சாகர் அணிக்கு திரும்பியது சிஎஸ்கேவில் பலத்தை கூட்டி இருக்கிறது.

Story first published: Wednesday, May 10, 2023, 22:05 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+