For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புனே ஐபிஎல் அணி கேப்டன் பதவியிலிருந்து டோணி திடீர் நீக்கம்!

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோணி நீக்கப்பட்டுள்ளார்.
 

பெங்களூரு: ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோணி திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகியுள்ளார்.

கடந்த ஐபிஎல் (9வது தொடர்) தொடரின்போது உதயமான அணி ரைசிங் புனே அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கத்தைத் தொடர்ந்து இந்த அணி உதயமானது. இந்த அணியின் கேப்டனாக டோணி நியமிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பலரும் இதில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸுக்குப் பதிலாக குஜராத் லயன்ஸ் அணி சேர்க்கப்பட்டிருந்தது. அதன் கேப்டனாக சுரேஷ் ரெய்னா செயல்பட்டு வருகிறார்.

MS Dhoni removed as Rising Pune Supergiants captain, Steve Smith to replace him

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலக்கலாக வழிநடத்திய டோணி புனே அணிக்கு ஏற்றம் தரத் தவறினார். கடந்த தொடரில் இந்த அணி 7வது இடத்தையே பிடித்தது (மொத்தமே 8 அணிகள்தான்). இதனால் டோணி சரக்கு தீர்ந்திருச்சா என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டோணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

Story first published: Sunday, February 19, 2017, 13:08 [IST]
Other articles published on Feb 19, 2017
English summary
IPL franchise Rising Pune Supergiants have removed Mahendra Singh Dhoni from the team's captaincy, according to India Today's reports. Australian skipper Steve Smith is all set to replace Dhoni as the new captain of Rising Pune Supergiants in the upcoming IPL 10. Rising Pune Supergiants side played their maiden IPL last year under the tutelage of MS Dhoni but unfortunately finished seventh in the eight teams points table.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X