சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே கே ஆர் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் எஞ்சிய கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இல்லையென்றால் அடுத்த அணிகளின் தயவு சி எஸ் கே அணி தேவைப்படும். இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தே நாம் தவறான முடிவை எடுத்து விட்டோம் என்பதை உணர்ந்ததாக கூறினார்.

இது குறித்து பேசிய தோனி, நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன். அதற்கு காரணம் பனிப்பொழிவு இருக்குமா இல்லையா என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆடுகளம் தொய்வாக இருக்கும் என்பதற்காக நாங்கள் முதலில் பேட்டிங்கை எடுத்தோம். ஆனால் நாங்கள் பந்து வீசும் போது , இங்கு 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று முதல் பந்திலேயே தெரிந்து விட்டது.
பனிபொழிவு பெரிய தாக்கத்தை இந்த ஆட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் எங்கள் பந்துவீச்சாளர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. கள சூழல்தான் இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய வெற்றியை பாதிக்க வைத்து விட்டது. சிவம் துபே இன்றைய ஆட்டத்தில் நன்றாகவே செயல்பட்டார். இதில் நம் பாராட்ட வேண்டியது என்னவென்றால் தொடர்ந்து பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என அவர் நினைக்கிறார். தன்னுடைய பேட்டிங்கில் அவர் மன நிறைவு அடைய மாட்டேம் என்கிறார்.
அது உண்மையிலேயே நல்ல விஷயம். தீபச்சாகர் பந்தை ஸ்விங் செய்தார். எந்த பில்டிங் வேண்டும் எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவருக்கே நன்றாக தெரிந்து விடும். அதற்கு தகுந்தார் போல் தான் அவரும் பந்து வீசுவார். பேட்டிங்கில் நாங்கள் கூடுதலாக ஒரு 25 ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது. அந்த ஆடுகளத்தில் கண்டிப்பாக 180 ரன்கள் எல்லாம் அடித்திருக்க முடியாது. இதனால் எங்கள் வீரர்கள் மீது நான் குறை சொல்ல விரும்பவில்லை என தோனி கூறினார்.