For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசு 33.. சாதனையோ நிறைய.. இன்று இந்திய அணியின் 'தல' டோணி பிறந்த நாள்!

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி இன்று தனது 33வது பிறந்த நாளை இங்கிலாந்தில் கொண்டாடினார்.

வழக்கமான பிறந்த நாள் போல் இல்லாமல் இந்த முறை அவருக்கு சற்று நெருக்கடியான பிறந்த நாள் . காரணம், இந்தியா, இங்கிலாந்து இடையே முதலாவது டெஸ்ட் போட்டி இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளதால் அந்த பிசியிலும் இருக்கிறார் டோணி.

டோணியின் வயது 33 ஆக இருந்தாலும் அவர் படைத்துள்ள சாதனைகள் நிறைய.. இதோ டோணி குறித்த 33 புள்ளி விவரத் தகவல்கள்....

1981ல் பிறந்த டோணி

1981ல் பிறந்த டோணி

1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ராஞ்சி நகரில் பிறந்தார் மகேந்திர சிங் டோணி.

டிடிஆர்....!

டிடிஆர்....!

டோணி கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்தவர்.

18 வயதில் ரஞ்சி கிரிக்கெட்

18 வயதில் ரஞ்சி கிரிக்கெட்

தனது 18வது வயதில் பீகார் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

2004ல் சர்வதேச கிரிக்கெட்

2004ல் சர்வதேச கிரிக்கெட்

2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார்.

2005ல் டெஸ்ட்

2005ல் டெஸ்ட்

2005ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

2007ல் கேப்டன்

2007ல் கேப்டன்

200ம் ஆண்டு ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் டோணி.

முதல் உலகக் கோப்பை

முதல் உலகக் கோப்பை

டோணி தலைமையில் டுவென்டி 20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.

3 முக்கியக் கோப்பைகள் டோணி பையில்

3 முக்கியக் கோப்பைகள் டோணி பையில்

ஐசிசியின் டுவென்டி 20, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே.

டோணி தலைமையில் டெஸ்ட்டில் நம்பர் ஒன்

டோணி தலைமையில் டெஸ்ட்டில் நம்பர் ஒன்

டோணி தலைமையில்தான் 2009ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் தரவரிசையைப் பிடித்தது.

விக்கெட் கீப்பராக அதிரடி ரன் குவிப்பாளர்

விக்கெட் கீப்பராக அதிரடி ரன் குவிப்பாளர்

டோணி, ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக அதிக ரன் குவித்த வீரர் என்றசாதனையை வைத்திருக்கிறார். 2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் 183 ரன்களைக் குவித்தார்.

ராஜீவ் காந்தி விளையாட்டு விருது

ராஜீவ் காந்தி விளையாட்டு விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற நாட்டின் உயரிய விளையாட்டு விருதை பெற்றவர் டோணி.

2முறை ஐசிசி சிறந்த வீரர்

2முறை ஐசிசி சிறந்த வீரர்

2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் ஆண்டின் சிறந்த வீரர் விருதைப் பெற்றவர் டோணி.

5 முறை ஐசிசி அணியில்

5 முறை ஐசிசி அணியில்

2008, 2009, 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் உலக லெவன் அணியில் இடம் பெற்றவர் டோணி.

3 முறை ஐசிசி டெஸ்ட் அணியில்

3 முறை ஐசிசி டெஸ்ட் அணியில்

அதேபோல 2009, 2010, 2103 ஆகிய ஆண்டுகளில்ஐசிசியின் டெஸ்ட் லெவன் அணியில் இடம் பெற்றார்.

மக்கள் சாய்ஸ் விருது

மக்கள் சாய்ஸ் விருது

2013ம் ஆண்டு ஐசிசியின் எல்ஜி மக்கள் சாய்ஸ் விருதைப் பெற்றவர் டோணி.

பைக்குன்னு பிரியாணி சாப்பிடுவது போல...

பைக்குன்னு பிரியாணி சாப்பிடுவது போல...

எப்படி அஜீத்துக்கு பைக் என்றால் உயிரோ அதேபோலத்தான் டோணிக்கும். பைக் பிரியர் மட்டுமல்ல வெறியரும் கூட. 12 பைக் வைத்துள்ளார். அவருடைய முதல் மோட்டார் சைக்கிள் ராஜ்தூத்.

வெற்றிகரமான கேப்டன்

வெற்றிகரமான கேப்டன்

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனும் கூட. 24 வெற்றிகளை ஈட்டியுள்ளார்.

கேப்டனாக சாதனை

கேப்டனாக சாதனை

அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய இந்தியரும் இவர்தான். 53 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை கேப்டனாக இருந்துள்ளார்.

விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை

விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை

விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளில் 263 டிஸ்மிஸ்ஸல்களை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சாதனை ஸ்டம்பர்

சாதனை ஸ்டம்பர்

ஒரு நாள் போட்டிகளில் 298 டிஸ்மிஸ்ஸல்கள். இதுவும் கூட சாதனையே.

மஹி ரேசிங்

மஹி ரேசிங்

டோணி, மஹி ரேஸிங் டீம் இந்தியா என்ற பெயரில் ஒரு ரேஸ் அணியையும் வைத்துள்ளார். வேர்ல்ட் சூப்பர்ஸ்போர்ட் போட்டியில் இந்த அணி பங்கேற்று வருகிறது.

அதுவும் 7... இதுவும் 7

அதுவும் 7... இதுவும் 7

டோணியின் பிறந்த நாள் எண்ணான 7தான் அவர் போட்டிகளின்போது அணியும் ஜெர்ஸியின் எண்ணும் கூட.

சென்ட் பார்ட்டியும் கூட

சென்ட் பார்ட்டியும் கூட

7 பை எம்எஸ் டோணி என்ற பெயரில் சென்ட்டும் கூட டோணி பெயரில் வருகிறது. குளிக்காதவர்களின் ஆபத்பாந்தவனாக இது கருதப்படுகிறது.

அதிகம் சம்பாதிக்கும் வீரர்

அதிகம் சம்பாதிக்கும் வீரர்

கடந்த மாதம்தான் அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்கள் வரிசையில் டோணியும் இடம் பெற்று, 22வது இடத்தைப் பிடித்தார். இவரது வருட சம்பாத்தியம் 30 மில்லியன் டாலராகும்.

25 கோடிக்கு ஒரு டீல்

25 கோடிக்கு ஒரு டீல்

கடந்த ஆண்டு டோணி, ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் மற்றும் அமீத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு ஸ்பான்சர்ஷிப்பி் கையெழுத்திட்டார். அதன் மதிப்பு ரூ. 25 கோடியாகும்.

2 முறை ஐபிஎல் சாம்பியன்

2 முறை ஐபிஎல் சாம்பியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனாக 2 முறை அந்த அணிக்கு கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஸ்டம்புன்னா உசுரு

ஸ்டம்புன்னா உசுரு

போட்டிகளில் வெற்றி பெற்றால் முதல் வேலையாக ஸ்டம்ப்பை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொள்வது டோணியின் பொழுதுபோக்கு. இதுவரை மிகப் பெரிய அளவிலான ஸ்டம்புகளை சேகரித்து வைத்துள்ளார். இதையெல்லாம் வைக்க தனியாக ரூம் போடப் போகிறாராம்.

2010ல் சாக்ஷியுடன் கல்யாணம்

2010ல் சாக்ஷியுடன் கல்யாணம்

2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்ஷி சிங் ராவத்துடன் இல் வாழ்க்கையில் இணைந்தார் டோணி.

கோல் கீப்பர்

கோல் கீப்பர்

கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு பள்ளி கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தவர் டோணி

2011ல் ராணுவத்தில்

2011ல் ராணுவத்தில்

டெரிடோரியல் ராணுவத்தில், 2011ம் ஆண்டு அவருக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது.

2012ல் டாக்டர்.. டோணி!

2012ல் டாக்டர்.. டோணி!

இங்கிலாந்தின் டி மான்ட்போர்ட் பல்கலைக்கழகம் டோணிக்கு 2012ம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

அதிக டெஸ்ட் ஸ்கோர்

அதிக டெஸ்ட் ஸ்கோர்

டோணிதான் இந்திய கேப்டன்களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த சாதனையாளர். 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 224 ரன்களை அவர் குவித்துள்ளார்.

விக்கெட் கீப்பராக ரன் குவிப்பு

விக்கெட் கீப்பராக ரன் குவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக 4000 ரன்களை பூர்த்தி செய்து சாதனையும் படைத்தவர் டோணி.

Story first published: Monday, July 7, 2014, 19:37 [IST]
Other articles published on Jul 7, 2014
English summary
Mahendra Singh Dhoni is celebrating his 33rd birthday today. More than the celebrations of this special occasion on Monday, Dhoni's mind will be occupied with the first Test against England which starts in two days' time in Nottingham.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+