தல தோனி ஹாப்பி அண்ணாச்சி... சந்தோஷத்துக்கு காரணம் இல்லாமலா... பெரிய காரணம்தான்!
ராஞ்சி : ஐபிஎல் 2021 தொடரின் முக்கிய அணியாக மாறியுள்ளது சிஎஸ்கே. ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Recommended Video
தோனியின் செயல்பாடு கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் சிறப்பாக இல்லை என்றாலும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இந்த சந்தோஷம் ஒருபுறம் இருக்க அவர் சந்தோஷப்பட மற்றொரு காரணமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

முக்கிய அணி சிஎஸ்கே
ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி முக்கிய மற்றும் முன்னணி அணியாக மாறியுள்ளது. கடந்த சீசனில் விட்டதை இந்த சீசனில் பிடித்துள்ளது சிஎஸ்கே. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை கெட்டியாக பிடித்துள்ளது.

ரசிகர்கள் ஆவல்
கடந்த சீசனில் மட்டுமின்றி இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டங்களை அளிக்கவில்லை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி. அவரது சிறப்பான ஆட்டங்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காணப்படுகின்றனர். ஒன்று அவருக்கு வாய்ப்பில்லாமல் துவக்க வீரர்களே சிறப்பாக ஆட்டத்தை முடித்து விடுகின்றனர்.

தோனி ஆட அறிவுறுத்தல்
அல்லது அவருக்கு ஆட வாய்ப்பு கிடைத்தாலும் அவர் சிறப்பாக ஆடாத நிலை காணப்படுகிறது. அவர் துவக்க ஆர்டரில் விளையாடி சிறப்பாக ஆட வேண்டும் என்றும் அவர் கேப்டன்ஷிப்பில் மட்டும் சிறப்பான கவனம் செலுத்தினாலே போதும் என்றும் இருவேறு கருத்துகள் அவர்குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

குணமடைந்த பெற்றோர்
தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தி அதன்மூலம் முதலிடத்தில் வைத்துள்ளார் தோனி. அவர் சந்தோஷப்பட இது ஒரு காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி அவர் மகிழ்ச்சியடைய மேலும் ஒரு காரணம் தற்போது காணப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் தற்போது குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
ராஞ்சியின் அவரது பண்ணை வீட்டில் வசித்துவரும் அவரது பெற்றோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications