For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை இதுக்கு தான் சிறந்த கேப்டன்னு சொல்றாங்க.. மேயர்ஸ் வந்ததும் தல செய்த மாற்றம்.. லட்டாக விக்கெட்

லக்னோ : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனியை ஏன் சிறந்த கேப்டன் என்று சொல்கிறார்கள் என்று என்பதற்கு இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

லக்னோ ஆடுகளம் தோய்வாக இருந்தாலும் , மழை பெய்ததன் காரணமாக டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்த ஆடுகளத்தில் 126 ரன்களையே துரத்த முடியாமல் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி தடுமாறும்.

MS Dhoni tatical change worked well against kyle mayers
Photo Credit:

இதனால் விக்கெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் எடுக்கிறார்களோ, அவ்வளவு நல்லது. இதனையடுத்து லக்னோ அணியின் அதிரடி வீரர் மேயர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினால் தான் சிஎஸ்கே அணிக்கு நல்லது. இதனால், கேப்டன் தோனி பவர்பிளேக்குள் மோயின் அலியை பந்துவீச அழைத்தார்.

இதனை பார்த்ததும் ரசிகர்கள், இவ்வளவு சீக்கிரம் எதற்கு மோயின் அலியை, அதுவும் மேயர்ஸ் இருக்கும் போது பயன்படுத்துகிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மோயின் அலி ஓவரில் யாரும் எதிர்பாராத வகையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தார்.

அப்போது தான் தெரிந்தது, மேயர்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமான ஸ்ட்ரைக் ரேட் வச்சிருந்தாலும், மோயின் அலியிடம் அவர் ஏற்கனவே 2 முறை ஆட்டமிழந்து இருக்கிறார். இதனை தெரிந்து கொண்டு தான் மேயர்ஸ பேட்டிங் செய்யும் போது மோயின் அலியிடம் பந்தை தோனி கொடுத்து கதையை முடித்தார். கடைசியாக 2 போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Wednesday, May 3, 2023, 16:32 [IST]
Other articles published on May 3, 2023
English summary
MS Dhoni tatical change worked well against kyle mayers தோனியை இதுக்கு தான் சிறந்த கேப்டன் சொல்றாங்க.. மேய்ர்ஸ் வந்ததும் தல செய்த மாற்றம்.. லட்டாக விக்கெட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+