Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைக்கு மும்பை போறாரு தல... இந்த சீசன்ல சிறப்பான ஆட்டங்கள் காத்திருக்கு.. வெயிட் அன்ட் சீ!

மும்பை : ஐபிஎல் 2021 தொடருக்காக மற்ற அணிகளை விட அதிக தீவிரமாக சிஎஸ்கே தயாராகி வருகிறது.

கடந்த சீசனில் சொதப்பிய சிஎஸ்கே, இந்த சீசனில் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று காத்திருக்கிறது.

இதையொட்டியே அதன் செயல்பாடுகளை கடந்த சில தினங்களாக பார்க்க முடிகிறது.

கோப்பைக்கு சிஎஸ்கே தீவிரம்

கோப்பைக்கு சிஎஸ்கே தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரின் 3 கோப்பைகளை வென்றுள்ளது சிஎஸ்கே. கடந்த சீசன் சிஎஸ்கேவிற்கு சிறப்பானதாக அமையவில்லை. ப்ளே-ஆப் சுற்றிற்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இந்நிலையில் விட்டதை பிடிக்க இந்த சீசனில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

மும்பைக்கு மாற்றம்

மும்பைக்கு மாற்றம்

கடந்த சில தினங்களாக தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது அதன் பயிற்சி முகாம்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுளள்தாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். வரும் 27, 28 தேதிகளில் முகாம் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோனி மும்பை வருகை

தோனி மும்பை வருகை

வரும் ஏப்ரல் 10ம் தேதி தனது முதல் போட்டியை சிஎஸ்கே விளையாடவுள்ளது. மும்பையில் அதன் 5 போட்டிகள் நடைபறெவுள்ளன. இந்நிலையில், சென்னையில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்ட சிஎஸ்கே கேப்டன் மும்பைக்கு நாளை வரவுள்ளதாக அணி சார்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி அணியுடன் மோதல்

டெல்லி அணியுடன் மோதல்

மும்பையில் குவாரன்டைன் மற்றும் பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ள சிஎஸ்கே, ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரம் அந்த அணியிடம் காணப்படுகிறது. கோப்பை வெற்றியுடன் தோனி தன்னுடைய ஐபிஎல் பயணத்தை நிறைவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, March 25, 2021, 12:53 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+