For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனி படைக்கப் போகும் சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராம்.. குஷியில் சென்னை ரசிகர்கள்!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் களமிறங்குவதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்து வெளியேற, இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

MS Dhoni will be playing his 250th IPL match today against Gujarat in the IPL Finals 2023 at Ahmedabad

அதுமட்டுமல்லாமல் சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் 5வது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் களமிறங்குவதன் மூலம், சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார். ஐபிஎல் தொடரில் 250 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைக்கவுள்ளார்.

அதேபோல் 11 ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் தோனி படைக்கவுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக 10வது இறுதிப்போட்டியில் களமிறங்கப் போகும் தோனி, ஏற்கனவே புனே அணியின் வீரராக ஒரு ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். இதனால் எம்எஸ் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவருக்கு பின் ரோகித் சர்மா 243 போட்டிகளிலும், விராட் கோலி 237 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணி கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான சாதனைகளை தோனி படைத்து வருகிறார். இதனால் தனது கடைசி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து, அதிக கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை தோனி சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 28, 2023, 10:18 [IST]
Other articles published on May 28, 2023
English summary
GT vs CSK: Chennai Captain MS Dhoni to play his 250th Match in the IPL History against Gujarat in the IPL Final 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+