For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தோனியின் டீம்... கடைசி வரை கூலாக விளையாடிய சிஎஸ்கேயின் வெற்றி மந்திரம்!

ஐபிஎல் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்தது. பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெறும் மந்திரத்தை அந்த அணி கற்றுத் தேர்ந்துள்ளது.

Recommended Video

எந்த நேரத்திலும் பொறுமையை கடைபிடிக்கும் சென்னை அணி

சென்னை: ஐபிஎல் வரலாற்றிலேயே மறக்க முடியாத சீசனாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அமைந்துள்ளன. இரண்டாண்டுகளுக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் இருந்து பைனல்ஸ் நுழையும் வரை தனது டெம்போவை விடாமல் கட்டிக் காத்து வந்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், தோனி என்ற மந்திரம்.

ஐபிஎல் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது. மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது சிஎஸ்கே.

ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில், தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த சிஎஸ்கே, ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 49 பந்துகளில் 75 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் சிஎஸ்கே இருந்தபோது, அந்த அணி வெற்றிபெறும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக பெற்ற வெற்றியில் இருந்து பல ஆட்டங்களில் பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவழைக்கும் வகையில் பரபரப்பான நிலை இருந்தபோதும், சிஎஸ்கே வீரர்கள் நிதானம் இழக்காமல் விளையாடினர்.

தோனியின் மந்திரம்

தோனியின் மந்திரம்

கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, எந்த சூழ்நிலையிலும் பரபரப்போ, பதற்றமோ அடையாமல் மிகவும் நிதானமாக கையாள்வார். அவருடன் இருப்பதால், சிஎஸ்கே வீரர்களுக்கும் அது தொற்றிக் கொண்டுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான நிலையில் இருந்தபோதும் டுபிளாசி அந்த தோனியின் மந்திரத்தை கையாண்டார்.

வயதானவர்கள் அணியா

வயதானவர்கள் அணியா

மிகவும் வயதானவர்கள் உள்ள அணி என்று கிண்டல் செய்யப்பட்டது சிஎஸ்கே. தம்பிங்களா நாங்க சிஎஸ்கேடா, என்று தைரியமாக கூறும் அளவுக்கு கடைசி கட்டம் வரை அதிரடியாக ஆடக் கூடிய அனுபவமுள்ள வீரர்களை பெற்றது அணியின் முக்கிய பலமாகும். அணியின் இளம் வீரர்களும் அதை படித்துக் கொண்டிருப்பார்கள்.

சிஎஸ்கே சாதனை

சிஎஸ்கே சாதனை

சிஎஸ்கே அணி இந்த சீசனையும் சேர்த்து தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் முன்னேறியுள்ளது. இந்த சாதனையை புரிந்துள்ள ஒரே அணி சிஎஸ்கேதான். இதுவரை 8 சீசன்களில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. 4 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2 முறை மட்டுமே பைனல்ஸ் வாய்ப்பை இழந்தது.

விசில் போடுங்க

விசில் போடுங்க

தற்போது 7வது முறையாக பைனல்ஸ் முன்னேறியுள்ள சிஎஸ்கே தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று சீசனின் துவக்கத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பரபரப்பான ஆட்டங்கள், ஹார்ட் அட்டாக் ஆட்டங்கள், திரில் வெற்றி ஆட்டங்கள் என்று ஒவ்வொரு போட்டியும் மாறி மாறி அமைந்தாலும், கூலாக இருப்பதுதான் வெற்றியின் மந்திரம் என்பதை தோனியின் அணியினர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.

Story first published: Wednesday, May 23, 2018, 8:48 [IST]
Other articles published on May 23, 2018
English summary
MSDhoni and co proved their victory manthra again in this ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X