Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் செய்வதே வேஸ்ட் ஏன்னா..".. எம்.எஸ்.கே.பிரசாத் அதிரடி அட்வைஸ்

மும்பை: இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுத்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை தொடக்க ஆட்டக்காரராக வலம் வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் விளாசியிருந்த போதும், ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில்லின் ஆதிக்கத்தால் அவரால் ஆடும் லெவனில் நுழைய முடியவில்லை. இதனால் அணியில் தனது வாய்ப்பை அதிகரிக்க ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியைத் தொடங்கினார்.

MSK Prasad Advises Yashasvi Jaiswal To Focus On Leg-Spin Bowling Over Wicketkeeping For White-Ball Recall

இதுகுறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் போன்ற விஷயங்களில் இறங்க வேண்டிய அவசியமே இல்லை. ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல் போன்றவர்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வரை தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்தவர்கள். அதனால் அந்த இயல்பான உணர்வு அவர்களிடம் இருந்தது. ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு அந்தப் பின்னணி கிடையாது.

அணியில் ஏற்கனவே ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என 3 நட்சத்திர விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அவர்களுக்கே இடம் கிடைக்க கடுமையான போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனும் ஒரு தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர்தான். எனவே கீப்பிங் மூலம் உள்ளே வர நினைப்பது சரியான சிந்தனை கிடையாது.

"விளையாட்டு தர்மத்தை மீறி விட்டாய்.. ஸ்டம்பை விட்டுட்டு..".. வெஸ்ட் இண்டீஸ் பவுலரை விளாசிய கவாஸ்கர்

மாறாக ஜெய்ஸ்வால் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சை மெருகேற்ற வேண்டும். இந்திய அணியின் டாப் ஆர்டரில் பந்துவீசக்கூடிய பேட்டர்கள் யாருமே இல்லை. பந்துவீசக்கூடிய பேட்டர்களையே தேர்வுக்குழு தேடுகிறது. எனவே பகுதிநேர பந்துவீச்சாளராக உருவெடுத்தால், வரும் 2027 உலகக்கோப்பை அணியில் ஜெய்ஸ்வாலுக்கு மிக எளிதாக இடம் கிடைக்கும்" என்று பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Story first published: Thursday, October 15, 2026, 8:33 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+