Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கையை உடைத்துவிட்டனர்".. இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய ஸ்ரீகாந்த்

சென்னை: இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களை அடிக்கடி மாற்றி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கையை அணி நிர்வாகம் உடைத்து விட்டது என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆவேசமாகத் பேசி இருக்கிறார்.

இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி என பல திறமையான தொடக்க பேட்டர்கள் உள்ளனர். ஆனால் யாருக்கும் நிலையான வாய்ப்பு வழங்கப்படாமல், ஆடும் லெவனில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது வீரர்களின் மன உறுதியைக் குலைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Vaibhav Suryavanshi confidence was broken by Indian team management says Krishnamachari Srikkanth

இதுகுறித்து தனது பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனின் நம்பிக்கையை மட்டும் கெடுக்கவில்லை, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கையையும் அடியோடு உடைத்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிக்கு எதிராக வைபவுக்கு குறைந்தது 3 போட்டிகளிலாவது தொடக்க வீரராக வாய்ப்பளித்திருக்க வேண்டும். அபிஷேக் சர்மா நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ஆடி வருகிறார். எனவே அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சனுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராகக் களம் இறக்க வேண்டும்.

அதேசமயம் சஞ்சு சாம்சனின் ஆட்டம் எப்போதுமே நிலையற்றதாக உள்ளது. உலகக்கோப்பையில் திடீரென அசாத்தியமாக விளையாடுவார், பின்னர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பார். ஆனால் அபிஷேக் சர்மாவிடம் இது போன்ற ஏற்ற இறக்கங்கள் இருக்காது" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 247 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையை எட்டியுள்ளது.

கம்பீர் செய்த மெகா தவறு.. இந்த வீரரை எடுக்காமல் விட்டதே தோல்விக்கு காரணம்.. விளாசிய வருண் ஆரோன்

கம்பீர் செய்த மெகா தவறு.. இந்த வீரரை எடுக்காமல் விட்டதே தோல்விக்கு காரணம்.. விளாசிய வருண் ஆரோன்

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 23 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த தொடரின் கடைசி போட்டியில் வைபவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, October 15, 2026, 7:59 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+