Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ப்ளானை மாத்தினேன்…! ஐபிஎல் சாம்பியன் ஆனோம்…! வெற்றி ரகசியத்தை போட்டுடைத்த ரோகித்

ஹைதராபாத்:கடைசி ஓவரை பாண்டியாவுக்கு பதில், மலிங்காவை அழைத்து திட்டத்தை மாற்றியதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் 4வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்று சாதனை படைத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆட்டத்தின் 20வது ஓவரில்... பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒரு ரன்னில் சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது:நாங்கள் நன்றாக விளையாடினோம். அதனால் தான் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் எங்களால் வர முடிந்தது. இந்த தொடரை சரிபாதியாக பிரித்து வைத்து தான் ஆடினோம்.

இறுதிக்கட்ட திட்டம்

இறுதிக்கட்ட திட்டம்

அனைத்து கிரெடிட்டுகளும் வீரர்களுக்கும், அணியில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். மலிங்காவை பற்றி சொல்ல வேண்டுமானால்.. சாம்பியன்கள் ஆடுவது போன்று ஆடியிருக்கிறார். இறுதி கட்டத்தில் நான் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன்.

திட்டத்தை மாற்றினேன்

திட்டத்தை மாற்றினேன்

அதாவது 20வது ஓவரை பாண்டியாவை வீச சொல்வது. ஆனால் கடைசி நேரத்தில் அதை மாற்றிவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்ற இக்கட்டான நிலையில் வெற்றி தேடி தந்தவர் மலிங்கா. எனவே அவரை பந்துவீச அழைத்தேன். அவரும் மிக சரியாக பந்துவீசி அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்திருக்கிறார் என்றார்.

3 ஓவர்களில் 42 ரன்கள்

3 ஓவர்களில் 42 ரன்கள்

சாம்பியன் கோப்பையை மும்பை கைப்பற்ற காரணமாக இருந்தவர் மலிங்கா. ஆனால்.. அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தியதில் தான் ரோகித்தின் கேப்டன்சி ஒளிந்திருக்கிறது. ஏன் எனில் 20வது ஓவரை வீசுவதற்கு முன்பு, 3 ஓவர்கள் வீசியிருந்த மலிங்கா... 42 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

மலிங்கா அற்புதம்

மலிங்கா அற்புதம்

எனவே அவருக்கு பதிலாக வேறு யாரேனும் பந்துவீசுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால்... கடைசி கட்டத்தில் பாண்டியாவை விட்டுவிட்டு மலிங்காவுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தார். சென்னை அணி, மலிங்காவின் பந்தை எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெறும் என்று நினைத்த வேளையில், விக்கெட் வீழ்த்தி அற்புதம் காட்டியிருக்கிறார் மலிங்கா.

Story first published: Monday, May 13, 2019, 13:10 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+