Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் டி20 தகுதி சுற்று: நடப்பு சாம்பியன் மும்பை படுதோல்வியுடன் வெளியேற்றம்

ராய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று போட்டியில் தோற்றதன் மூலம், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பிரதான பிரிவில் ஆடும் வாய்ப்பை இழந்தது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நார்தன் டிஸ்ட்ரிக்சை (நியூசிலாந்து) நேற்றிரவு ராய்ப்பூரில் எதிர்கொண்டது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் மும்பை அணி இருந்தது. அதே நேரம் நார்தன் அணி ஏறத்தாழ பிரதான சுற்று வாய்ப்பை உறுதி செய்திருந்தது.

மும்பை திணறல்

மும்பை திணறல்

இருப்பினும் நார்தன் அணியின் முழு அர்ப்பணிப்புடன் விளையாடினர். அவர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்த மும்பை திணறியது.

நியூசிலாந்து பந்து வீச்சு அபாரம்

நியூசிலாந்து பந்து வீச்சு அபாரம்

20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 132 ரன்களை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 31 ரன்களும், கோபால் 24 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர்கள் லென்டில் சிமோன்சும் (13 ரன்), மைக் ஹஸ்சியும் (7 ரன்) ஏமாற்றம் அளித்தனர். நார்தன் அணி தரப்பில் டிம் சவுதி, ஸ்காட் ஸ்டைரிஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

அடுத்து ஆடிய நார்தன் அணி கனே வில்லியம்சன் (53 ரன்), ஆன்டன் டேவ்சிச் (39 ரன்) ஆகியோரின் நேர்த்தியான பேட்டிங்கின் உதவியுடன் 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

லாகூர் அபாரம்

லாகூர் அபாரம்

இதனிடையே மாலையில் நடந்த ஆட்டத்தில் லாகூர் லயன்சும் (பாகிஸ்தான்), சதர்ன் எக்ஸ்பிரசும் (இலங்கை) மோதின. முதலில் பேட் செய்த லாகூர் அணி 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.

சதர்ன் எக்ஸ்பிரஸ் படுதோல்வி

சதர்ன் எக்ஸ்பிரஸ் படுதோல்வி

இரண்டாவது பேட்டிங் செய்த சதர்ன் எக்ஸ்பிரஸ் 18 ஓவர்களில் 109 ரன்னில் ஆல் அவுட் ஆனது. லாகூர் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அந்த அணியின் 2வது வெற்றி. அய்சாஸ் சீமா 3 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ், அட்னன் ரசூல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

நார்தன், லாகூர் உள்ளே

நார்தன், லாகூர் உள்ளே

தகுதி சுற்று முடிவில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி 3 வெற்றிகளுடனும், லாகூர் லயன்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடனும் பிரதான சுற்றுக்கு முன்னேறின.

மும்பை, சதர்ன் வெளியே

மும்பை, சதர்ன் வெளியே

மும்பை இந்தியன்ஸ் (2 தோல்வி, ஒரு வெற்றி) சதர்ன் எக்ஸ்பிரஸ் (3 தோல்வி) ஆகிய இரு அணிகளும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறின. இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணி 4வது இடத்தை பிடித்திருந்தது. முதல் மூன்று இடங்களுக்குள் வரும் அணி மட்டுமே நேரடியாக சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 17, 2014, 11:05 [IST]
Other articles published on Sep 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+