Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு முன்பு பொட்டிப் பாம்பாய் அடங்கிப் போன பெங்களூரு.. "இந்தியன்ஸு"க்கு முதல் வெற்றி!

பெங்களூரு: மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியாக முதல் வெற்றியை நேற்று சுவைத்து விட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது பிரமாதமாக ஆடி 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி கரையேறி விட்டது.

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின்போது முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ரன்களில் நின்று போனது.

நடப்புத் தொடரில் தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து விரக்தியில் இருந்து வந்த மும்பைக்கு நேற்று கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல் வெற்றியாகும். அதேசமயம், பெங்களூரு அணிக்கு இது 2வது தோல்வியாகும்.

கைவிட்ட கெய்ல்

கைவிட்ட கெய்ல்

பெங்களூரு அணி கிறிஸ் கெய்லைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் நேற்று கெய்ல் கிளிக் ஆகவில்லை. 24 பந்துகளைச் சாப்பிட்ட கெய்ல் 10 ரன்களில் நடையைக் கட்டும் நிலை நேற்று ஏற்பட்டது.

6 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே

6 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே

மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்த பெங்களூரு, முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பலவீனத்தைக் காட்டுவதாக அமைந்தது.

கோஹ்லி - கார்த்திக் ஏமாற்றம்

கோஹ்லி - கார்த்திக் ஏமாற்றம்

கேப்டன் விராத் கோஹ்லி, திணேஷ் கார்த்திக் ஆகியோர் சற்று பெரிய அளவில் ஆட முயற்சித்தனர். நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இருவரும் ஆளுக்கு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

டிவில்லியர்ஸின்

டிவில்லியர்ஸின் "டெவில்" ஆட்டம்!

ஆப் டிவில்லியர்ஸ்தான் நேற்று அசத்தி விட்டார். 11 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிரடியாக ஆடி 41 ரன்களைக் குவித்து அசத்தினார். ஆனாலும் அது உதவவில்லை.

வீஸ் புயல்

வீஸ் புயல்

அதேபோல டேவிட் வீஸ் 25 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். அதுவும் பெங்களூருக்கு கை கொடுக்கவில்லை. முன்னால் ஆடியவர்கள் சொதப்பியதால் இவர்களின் அதிரடி பலன் தராமல் போய் விட்டது.

போலார்டின் கடைசி ஓவரில் சிதைந்த கனவு

போலார்டின் கடைசி ஓவரில் சிதைந்த கனவு

பெங்களூர் அணி தனது கடைசி ஓவரில் 28 ரன்களை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தது. போலார்ட் பந்து வீசினார். அந்த ஓவரில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது பெங்களூரு அணியால்.

3 விக்கெட் தூக்கிய ஹர்பஜன் சிங்

3 விக்கெட் தூக்கிய ஹர்பஜன் சிங்

மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். இதன் மூலம் தனது 100வது ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்களைச் சாய்த்து சாதனை படைத்தார்.

சிம்மம் போல கர்ஜித்த சிம்மன்ஸ் - சந்த்

சிம்மம் போல கர்ஜித்த சிம்மன்ஸ் - சந்த்

முன்னதாக மும்பை இந்தியன்ஸின் பேட்டிங்கின்போது லென்டில் சிம்மன்ஸ் மற்றும் உன்முக்த் சந்த் ஆகியோர் ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டு பெங்களூர் பந்து வீச்சை பதம் பார்த்து விட்டனர். சிம்மன்ஸ் 59 ரன்களையும், சந்த் 58 ரன்களையும் குவித்தனர்.

ரோஹித்தின் கேமியோ

ரோஹித்தின் கேமியோ

கேப்டன் ரோஹித் சர்மா தன் பங்குக்கு 15 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து அசத்தினார். பெங்களூர் பந்து வீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார்.

பலே பாண்டியா

பலே பாண்டியா

கடைசியில் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா, 6 பந்துகளில் 16 ரன்களை விளாசி பெங்களூர் பந்து வீச்சை ரொம்பவே டீஸ் செய்து விட்டுப் போனார்.

Story first published: Monday, April 20, 2015, 8:47 [IST]
Other articles published on Apr 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+