Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டி.. ராஜஸ்தான் அபார வெற்றி!

Recommended Video

முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடந்தது. இதில் ராஜஸ்தான் அணி 7விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் 6வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

Mumbai faces Rajasthan in IPL 2018

நடப்பு சாம்பியனான மும்பை அணி இன்று எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தது. அதேபோல் ராஜஸ்தான் வெற்றியை தொடர தீர்க்கமாய் இருந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கும் ப்ளே வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்த போட்டி மும்பை மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது. லெவிஸ் அதிகமா 60 ரன்கள் எடுத்தார். அடுத்த அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் 18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்தது. பட்லர் 93 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியுள்ளது.

Story first published: Monday, May 14, 2018, 8:40 [IST]
Other articles published on May 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+