Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கல்லில் 3 மாங்காய்.. மும்பை அணியின் பயிற்சியாளராகும் மார்க் பவுச்சர்.. அட்டகாச அறிவிப்பு!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Mumbai Indians அணியில் இணைந்த Mark Boucher *Cricket

ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்ற அணி என்ற சிறப்பை பெற்ற மும்பை இந்தியன்ஸ் கடந்தாண்டு சொதப்பியது.

இந்நிலையில் இந்தாண்டு சிறப்பான கம்பேக்கை கொடுப்பதற்காக பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனர்.

மார்க் பவுச்சர்

மார்க் பவுச்சர்

அதன்படி மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மஹிலா ஜெயவர்தனேவை சர்வதேச மும்பை அணிகளின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளது. அவருக்கு மாற்றாக ஐபிஎல்- புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பவுச்சருக்கு ஜாக்பாட் என்றே கூற வேண்டும்.

ராஜினாமா

ராஜினாமா

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது பவுச்சர் தான் உள்ளார். அவரின் பயிற்சியில் அந்த அணி 11 டெஸ்ட் வெற்றிகள், 12 ஒருநாள் போட்டி வெற்றிகள், 23 டி20 வெற்றிகளை குவித்துள்ளது. எனினும் சமீபத்தில் ஏற்பட்ட தோல்விகளால் வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அப்பதவியில் இருந்து பவுச்சர் விலகவுள்ளதாக அறிவித்தார்.

3 மாங்காய்

3 மாங்காய்

இந்த சூழலில் தான் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஐபிஎல் மட்டுமல்லாது, மேலும் 2 தொடர்களுக்காகவும் பவுச்சரை ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ரிலையன்ஸுக்கு சொந்தமான கேப்டவுன் அணிக்கும் அமீரக டி20 லீக்கில் ரிலையன்ஸுக்கு சொந்தமான எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கும் இவரே தலைமை பயிற்சியாளராகிறார்.

பவுச்சர் விளக்கம்

பவுச்சர் விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள பவுச்சர், மும்பை அணிக்காக பணியாற்றவிருப்பதில் பெருமையாக இருக்கிறது. அந்த உலகில் சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ் என்பதை அதன் வரலாறுகளும், சாதனைகளும் உறுதி செய்கின்றன. எனவே அவர்களின் பெருமைகளை தொடர்ந்து எடுத்துச்செல்ல ஆர்வமாக காத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 16, 2022, 17:17 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+