KXIP vs MI:பேட்டிங்கில் திணறும் மும்பை... தொடக்க வீரர் ரோகித், சூர்யகுமார் அடுத்தடுத்து அவுட்
மொகாலி:ஐபிஎல் தொடரில் மொகாலியில் தொடங்கியுள்ள போட்டியில் மும்பை தொடக்க வீரர் ரோகித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவும் விரைவில் அவுட்டானார்.
2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும். நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணையை வெளியிடவில்லை. இந்நிலையில் மொகாலியில் 9வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

மும்பை பேட்டிங்
பஞ்சாப்பின் மொகாலி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு உள்ளார்.

வீரர்கள் யார்?
அவருக்கு பதிலாக முருகன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான மும்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்:கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), கெய்ல், மயன்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜோன், ரவிசந்திர அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஆண்ட்ரியூ டை.

மும்பை வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:குன்விண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, மிட்செல் மெக்லெங்கன், மாயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், லசீத் மலிங்கா.

நிதான ஆட்டம்
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் மும்பை அணியானது 3 ரன்கள் எடுத்தது.

மெதுவான ஆட்டம்
2வது ஓவரை சமி வீச, அதில் மட்டும் 17 ரன்கள் சேர்ந்தன. 2வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் எடுத்தது. 3, 4 என படிப்படியான ஓவர்களில் இருவரும் ரன்களை சேர்த்தனர்.

50 ரன்கள் சேர்ப்பு
5 ஓவர்கள் முடிந்த போது மும்பை அணி எளிதாக 50 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க வீரர்களான ரோகித்தும், டி காக்கும் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

அடுத்தடுத்து அவுட்
அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்த போது ரோகித், வில்ஜோன் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த சூர்யகுமார் யாதவும் 11 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்தடுத்து விக்கெட் இழப்புகளால் மும்பை அணி திணறுகிறது.


Click it and Unblock the Notifications