Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs CSK :என்னய்யா நடக்குது அங்க…? வந்தவங்க எல்லா அவுட்டாகிட்டே போறீங்க.. திணறும் மும்பை

Recommended Video

சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி

மும்பை:ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அதிரடியாக ரன்களை குவிக்க ஆசைப்பட்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 15வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் களம் கண்டுள்ளன.

1
45771

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் இருந்து மிட்செல் சா அண்டர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சேர்ப்பு

சேர்ப்பு

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மிட்செல் மெக்லெங்கன் மற்றும் மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ராகுல் சாஹர் மற்றும் பெஹண்ட் ரூஃப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: அம்பத்தி ராயூடு, சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மோஹித் சர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

யார்? யார்?

யார்? யார்?

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், லசீத் மலிங்கா, ஜேசன் பெஹண்ட்ரூஃப்

மந்தமான தொடக்கம்

மந்தமான தொடக்கம்

முதலில் களம் கண்டுள்ள மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். பெருத்த ஆரவாரங்களுக்கு இடையே தொடங்கி உள்ள இந்த போட்டியில், முதல் ஓவரை சாஹர் வீச, அந்த ஓவரில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

அதன் பிறகு... 2வது ஓவரில் ஒரு ரன் கிடைத்தது. 3வது ஓவரில் சாஹர் பந்தில் டி காக் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 4வது ஓவரில் ரோகித்தும், சூர்ய குமார் யாதவும் மட்டையை சுழற்ற அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது.

ரோகித் அவுட்

ரோகித் அவுட்

ஒவ்வொரு ஓவரிலும் சீராக ரன்கள் வந்து கொண்டிருக்க, ஜடேஜாவின் ஓவரில் மும்பைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நட்சத்திர வீரர் ரோகித், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ரசிகர்களுக்கோ அதிர்ச்சி.

அபாரமான கேட்ச்

அபாரமான கேட்ச்

அதன் பின்னர் யுவராஜும், சூர்யகுமார் யாதவ்வும் ஆட்டத்தை தொடர்ந்தனர். அந்த ஜோடியும் ஒழுங்காக ஆட வில்லை. அடித்து ஆட முற்பட்ட யுவராஜ் இம்ரான் தாஹிர் பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க.... எல்லையில் தயாராக இருந்த அம்பத்தி ராயுடு அற்புதமாக கேட்சி பிடிக்க... அவுட்.

மும்பை திணறல்

மும்பை திணறல்

தேவையில்லாமல் இந்த ஷாட்டை அடித்து தன்னை பலிகடாக்கி விட்டார் யுவராஜ். முதல் 50 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறுவதால் மும்பை ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளளனர்.

Story first published: Wednesday, April 3, 2019, 21:01 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+