For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெண்டுல்கர் அபார ஆட்டம்- டோணி வந்தும் வீழ்ந்த்து சென்னை சூப்பர் கிங்ஸ்

By Staff

மும்பை: ஐபிஎல் போட்டியில், டெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியைச் சந்தித்த்து.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸும் சந்தித்தன. காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வந்த கேப்டன் டோணி நேற்று சென்னை அணிக்குத் திரும்பினார்.

டாஸ் வென்ற டெண்டுல்கர் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி மும்பை வீர்ர்கள் பவுலிங்கை தொடங்கினர். சென்னை அணியில் தொடக்க ஆட்டக்கார்ர்களான பார்த்திவ் படேல் 8 ரன்களில் வீழ, மாத்யூ ஹெய்டன் 20 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் இணைந்த சுரேஷ் ரெய்னாவும், பத்ரிநாத்தும் அதிரடியாக ஆடினர். விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடினர்.

ரெய்னா 83 ரன்களைக் குவித்தார். பத்ரிநாத்தின் பங்கு 55 ரன்களாகும். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களைக் குவித்தது சென்னை.

பின்னர் ஆடத் தொடங்கிய மும்பை அணியில், தொடக்கமே அட்டகாசமாக இருந்த்து. தவனும், டெண்டுல்கரும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். அதிரடியாக ஆடிய தவன் 33 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார்.

மறுபக்கம் டெண்டுல்கர் 52 பந்துகளைச் சந்தித்து 72 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த திவாரியும், சதீஷும் சொற்ப ரன்களில் திரும்பினர். ஆனால், போலார்ட் 9 பந்துகளில் 20 ரன்களைக் குவித்து வேலையை எளிதாக்கினார். அதேபோல பிரேவோ 7 பந்துகளை மட்டும் சந்தித்து 11 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்களை எடுத்து மும்பை சிறப்பான வெற்றியைப் பெற்றது.

ஆட்ட நாயகனாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி அபார வெற்றி

பெங்களூரில் நடந்த இன்னொரு போட்டியில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி அபாரமாக தோற்கடித்த்து.

பெங்களூர் அணி டாஸ் வென்று, டெல்லியை முதலில் பேட் செய்யப் பணித்த்து. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் அதிரடியாக ஆடி 33 ரன்களைக் குவித்தார்.

ஷேவாக் 12 ரன்களில் ஏமாற்றமளித்தார். ஆனால் அப் டிவில்லியர்ஸ் 45 ரன்களைக் குவித்து ஸ்கோரை வலுவாக்கினார். பின்னர் வந்த ஜாதவ் ரன் மழை பொழிந்து டெல்லி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 29 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜாதவ்.

இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுதத்து டெல்லி.

பின்னர் ஆடத் தொடங்கிய பெங்களூருக்கு பாண்டேவும், கல்லிஸும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருப்பினும் பின்னர் வந்த ராபின் உத்தப்பா, டிராவிட், மோர்கன் ஆகியோர் விரைவிலேயே அவுட் ஆனதால், அணி தடுமாற ஆரம்பித்த்து.

விராத் கோலி அபாரமாக ஆடி 23 பந்துகளில் 38 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் விசேஷம், அப் டிவில்லியர்ஸ், பவுண்டரி லைன் அருகே வைத்து பிரவீன் குமார் அடித்த பந்தை கேட்ச் செய்த்துதான். யாருமே எதிர்பாராத வகையில் அந்த அற்புதமான கேட்ச்சைப் பிடித்தார் வில்லியர்ஸ்.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்த பெங்களூர் 166 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்து.

சிறப்பாக ஆடிய ஜாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தடுக்கப்பட்டார்.

இந்த வெற்றி தற்போதைய தொடரில் டெல்லிக்குக் கிடைத்துள்ள 3வது வெற்றியாகும். பெங்களூருக்கு இது 2வது தோல்வியாகும்.

டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் திணேஷ் கார்த்திக் தலைமையில் 3 போட்டிகளை சந்தித்த டெல்லி, தற்போது 3வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+