எஸ்ஆர்எச் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி... ஐபிஎல் பட்டியலில் முதலிடம்
ஷார்ஜா : ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியுள்ளது.

ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஐபிஎல் பட்டியலில் முதலிடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொதப்பினாலும், அடுத்து களமிறங்கிய அணியின் வீரர்கள் அந்த அணியின் வெற்றியை உறுதிப் படுத்தினர்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், நாளைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதையடுத்து அந்த அணிகள் முதலிடத்தை பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications