
நடப்பு சாம்பியன்
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை கோப்பை எதையும் வெற்றி கொள்ளாத ஆர்சிபியுடன் மோதவுள்ளது. வெற்றித் தீவிரத்துடன் உள்ள ஆர்சிபி அணியுடனான இந்த போட்டி இன்றைய தினம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக்கிற்கு தீவிரம்
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐபிஎல்லிலில் 5 முறை கோப்பை வென்றுள்ளது. கடந்த இரு தொடர்களில் தொடர்ந்து தொடர்களை வெற்றி கொண்டுள்ள அந்த அணி இந்த ஆண்டும் கோப்பையை வென்று ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சிறப்பான ஆளுமை
அந்த அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றனர்.

மும்பை வீரர்களுக்கு வாய்ப்பு
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடையிலான முரண்பாடுகள் கோச் ரவி சாஸ்திரியின் தலைமையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை கடந்த தொடர்களில் பெற்று தந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை இவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

வீரர்களின் உத்தேச பட்டியல்
மீண்டும் தங்களது திறமைகளை ஐபிஎல் 2021 சீசனில் வெளிப்படுத்தி தொடர்ந்து வெற்றிநடை போட வேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிராக இன்றைய தினம் விளையாடவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

சிறப்பான வீரர்கள்
இதில் குவின்டன் டீ காக் மற்றும் ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, பியூஷ் சாவ்லா அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரோகித்துடன் கூட்டணி
துவக்க வீரர் ரோகித் சர்மாவுடன் கடந்த சீசனை போல சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகியோர் சிறப்பாக கைகொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











