Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவரைக் காட்டிய அம்பானி.. மும்பை இந்தியன்ஸின் புதிய அவதாரம்.. ஓவல் இன்வின்சிபிள்ஸ் இனி "எம்ஐ லண்டன்"!

லண்டன்: இங்கிலாந்தின் பிரபலமான தி ஹன்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் பெரும் மாற்றம் நிகழவுள்ளது. இதுவரை ஓவல் இன்வின்சிபிள்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்த லண்டன் அணி, இனி "எம்ஐ லண்டன்" (MI London) என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் என்பதன் சுருக்கம் தான் எம்ஐ.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸின் உரிமையாளர்களான அம்பானி குடும்பம், ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் 49 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த புதிய உரிமையாளர் மாற்றத்தைத் தொடர்ந்து, அணியின் பெயரை தங்கள் உலகளாவிய கிரிக்கெட் குழுமமாக இருக்கும் "எம்ஐ" பிராண்டுக்கு ஏற்றவாறு மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

49 சதவீத பங்கு மட்டுமே வைத்து இருந்தாலும், அதாவது பங்கு அடிப்படையில் ஓவல் அணியின் இரண்டாவது உரிமையாளராக இருக்கும் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் குழுமம் அந்த அணியின் பெயரை தங்களின் பிராண்ட் பெயரை ஒட்டி மாற்ற உள்ளனர். இதற்கு அம்பானியின் செல்வாக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Mumbai Indians Family Expands as Oval Invincibles Becomes MI London

ஏற்கனவே, எம்ஐ கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா), எம்ஐ நியூயார்க் (அமெரிக்கா), எம்ஐ எமிரேட்ஸ் (யுஏஇ) என பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் அணிகளை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது லண்டன் அணியும் "எம்ஐ லண்டன்" ஆக இணைந்துள்ளது.

எப்போது முதல் இந்த மாற்றம்?

இந்த பெயர் மாற்றம், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தி ஹன்ட்ரட் தொடருக்கு முன்னதாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பெயர் மாறுவதோடு, ஜெர்சியின் நிறமும் தற்போதைய நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருந்து, மும்பை இந்தியன்ஸின் பாரம்பரிய நீலம் மற்றும் தங்க நிறத்திற்கு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி ஹன்ட்ரட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணியாக ஓவல் இன்வின்சிபிள்ஸ் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸின் வருகை மற்றும் இந்தப் பெயர் மாற்றம், அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றிகள்

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று (2013, 2015, 2017, 2019, 2020) மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல்-ஐ தாண்டியும் பல நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு, தற்போது நடைபெறாத சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் இரண்டு முறை (2011, 2013) கைப்பற்றி, தங்களின் ஆதிக்கத்தை முதன்முதலில் பறைசாற்றியது.

2023-ல் தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் முதல் மற்றும் மூன்றாவது சீசனில் (2023, 2025) மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி கோப்பையை வென்றது. அதேபோல், அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரின் முதல் இரண்டு சீசன்களிலும் (2023, 2025) எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.

இந்த வெற்றிப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் தொடர்ந்தது. எம்ஐ எமிரேட்ஸ் அணி 2024-ல் இன்டர்நேஷனல் லீக் டி20 (ILT20) கோப்பையையும், எம்ஐ கேப் டவுன் அணி 2025-ல் SA20 கோப்பையையும் வென்று, எம்ஐ அணிகளின் கோப்பை எண்ணிக்கையை 13-ஆக உயர்த்தியுள்ளது.

Story first published: Friday, August 22, 2025, 8:08 [IST]
Other articles published on Aug 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+