Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாடா ரூ.17.5 கோடி தப்பிச்சது.. மும்பை ரசிகர்களுக்கு நற்செய்தி.. கேமரூன் கிரீன் தரமான செய்கை!

மெல்பேர்ன்: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கோப்பையின் கனவை ஒருபடி கூட்டும் வகையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் அசத்தலான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் தென்ன்னாப்பிரிக்க அணி முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.

குறிப்பாக முழுசாக இரண்டு நாட்கள் கூட முடிவடையாத சூழலில் ஒரு டெஸ்ட் போட்டியே முடிந்துவிட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் 2வது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முணைப்புடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எப்படியாவது ரன் வேட்டை நடத்திவிட வேண்டும் என ஆர்வத்துடன் தென்னாப்பிரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைத்தார் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன்.

அட்டகாச செயல்பாடு

அட்டகாச செயல்பாடு

தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்களான தியுனிஸ் டி ப்ருயுன் (12), வெர்ரேய்ன் (52), மார்கோ யான்சன் (59), ரபாடா (4), லுங்கி இங்கிடி (2) ஆகியோர் அடுத்தடுத்து கேமரூன் கிரீனின் வேகத்தில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 189 ரன்களுக்கெல்லாம் அந்த அணி ஆல் அவுட்டானது. சிறப்பாக செயல்பட்ட கிரீன் 10.4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அவரின் இந்த ஆட்டத்தால் ஆஸ்திரேலிய ரசிகர்களை விட, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தின் போது கேமரூன் கிரீனை ரூ. 17.5 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது. இவர் பொல்லார்டுக்கு மாற்று வீரராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு குழப்பம் இருந்தது.

 என்ன குழப்பம்

என்ன குழப்பம்

கடந்தாண்டு மெகா ஏலத்தின் போது இளம் வீரர் இஷான் கிஷானை ரூ. 15.25 கோடி கொடுத்து மும்பை வாங்கியது. ஆனால் அவர் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தார். எனவே இந்த முறை கிரீனும் ஏமாற்றிவிடுவாரா என்ற குழப்பம் இருந்தது. அதனை தற்போது பொய்யாக்கியுள்ளார் க்ரீன். இவர் ஐபிஎல்-ல் விளையாடுவதை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Monday, December 26, 2022, 16:39 [IST]
Other articles published on Dec 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+