Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.17.5 கோடி போச்சா??.. மும்பை அணி மீது இடியை இறக்கிய ஆஸ்திரேலிய வாரியம்.. ஜகா வாங்கிய பிசிசிஐ!

மும்பை: ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.5 கோடி கொடுத்து வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் தொடர் யாரும் எதிர்பாராத பல்வேறு மாற்றங்களுடன் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. அதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைகளை கொடுத்து அணிகள் வாங்கின.

முக்கியமாக 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ரூ. 17.5 கோடி கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச தொகை இதுவாகும்.

மும்பைக்கு சிக்கல்

மும்பைக்கு சிக்கல்

இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் பந்துவீச மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2023ம் ஆண்டு உலகக்கோப்பை வருவதால், அனைத்து வாரியங்களும் தங்களது வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் தான் ஆஸ்திரேலிய வாரியமும், கேமரூன் கிரீனை ஐபிஎல்-ல் ஏப்ரல் 13ம் தேதிவரையில் பந்துவீசக்கூடாது எனக் கூறியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் மார்ச் மாதம் பார்டர் கவாஸ்கர் டிராஃபி தொடர் நடைபெறவுள்ளது. 4 போட்டிகளிலுமே கேமரூன் கிரீன் விளையாடினால், அவர் அடுத்த 4 வாரங்களுக்கு பேட்டிங் மட்டுமே செய்ய வேண்டும். அதாவது கடைசி டெஸ்டில் ( மார்ச் 9 - 13) இருந்து இந்த நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பந்துவீசினால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

அணிகளின் நிலைபாடு

அணிகளின் நிலைபாடு

இதுகுறித்து ஐபிஎல் அணிகளுக்கு ஏலத்திற்கு முன்பே தெரிவித்துவிட்டனர். வீரர்களின் பங்கேற்பு, விதிமுறைகள் அனைத்தையும் தெளிவாக கூறிய பின்னரே கேமரூன் கீரினை மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. எனவே அதற்கேற்ற திட்டம் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கேமரூன் கிரீன் தற்போதும் விளையாடாமல் தான் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்டில் விரலில் அடிபட்ட அவர், ஓய்வில் இருக்கிறார்.

பிசிசிஐ-ம் நிபந்தனை

பிசிசிஐ-ம் நிபந்தனை

ஆஸ்திரேலியாவை போலவே இந்திய வாரியமும் சில விதிமுறைகளை வைத்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பைக்காக 20 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர். அந்த 20 வீரர்களின் பணிச்சுமைகளையும் பிசிசிஐ நேரடியாக கண்காணிக்கும். மேலும் அவர்களை அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்காமல், தேவையான ஓய்வினை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, January 3, 2023, 10:43 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+