மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளரான பொல்லார்ட்.. பல்தான்ஸ் உற்சாக கொண்டாட்டம்!
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராக இருந்த மஹிலா ஜெயவர்தனே பதவி நீக்கம் செய்யப்பட்ட சூழலில், மும்பை அணி நிர்வாகம் பொல்லார்ட்-க்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறது. இதனால் மும்பை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியில் இருந்து மஹிலா ஜெயவர்தனே நீக்கப்பட்டிருந்தார். மும்பை அணி நிர்வாகத்தின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மும்பை அணிக்குள் நிலவும் பிரச்சனையை சரி செய்யவோ, மாறி வரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப அப்டேட் ஆக முடியாததும் ஜெயவர்தனே பதவி நீக்கத்திற்கு காரணமாக பார்க்கப்பட்டது.

அதேபோல் மும்பை அணி நிர்வாகம் விரும்பிய சில முடிவுகளை செயல்படுத்த ஜெயவர்தனே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மும்பை அணியுடன் இருந்த அத்தனை தொடர்புகளையும் ஜெயவர்தனே முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் புதிய பயிற்சியாளராக யார் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மும்பை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில சீசன்களாகவே மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 2010 முதல் 2023 வரை மும்பை அணிக்காக ஆடி இருக்கிறார். இதனால் மும்பை அணி உரிமையாளர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறது.
இதனால் பொல்லார்ட்-க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பொல்லார்ட் வேறு சில பயிற்சியாளர்கள் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பொல்லார்ட் நியமனம் மும்பை ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. பொல்லார்ட் தலையீடு மூலமாக ஹர்திக் பாண்டியா மற்றும் இதர வீரர்கள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
அதேபோல் சீனியர் வீரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே எம்ஐ லண்டன் அணிக்காக பொல்லார்ட் பயிற்சியாளராக செயல்பட்டது அந்த அணி நிர்வாகத்தை கவர்ந்தது. இதன் அடிப்படையிலும் பொல்லார்ட் நியமனம் நடந்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
