Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னத்த சொல்ல... ஆரம்பமே சரியில்ல... 7வது வருஷமாக ஓபனிங் மேட்ச்ல தோத்துட்டோமே..

மும்பை:தொடர்ந்து 7வது ஆண்டாக, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் வழக்கம் போல, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ரசிகர்களும் அவரவர் அணியின் முதல் போட்டியை வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை அணி தான் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றியுடன் துவக்கி ரசிகர்களின் மகிழ்ச்சியை தொடக்கி வைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற போட்டிகளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

மும்பை பீல்டிங்

மும்பை பீல்டிங்

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை பீல்டிங் செய்தது. டெல்லி தரப்பில் தொடக்க வரிசையில் களமிறங்கிய பிரித்வி ஷா 7 ரன்களுடனும், கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 16 ரன்களுடனும் மெக்கிலேனகன் பந்தில் அவுட்டானார்கள்.

இங்கிராம் 47

இங்கிராம் 47

பின்னர் ஷிகர் தவான், காலின் இங்கிராம் ஜோடி ரன்களை சேர்த்தது. 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 47 ரன்களை எடுத்த இங்கிராம், பென் கட்டிங் பந்துவீச்சில் அவுட்டானார். சிறப்பாக ஆடி வந்த தவன் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 43 ரன்களை சேர்த்திருந்த போது, பாண்டியா பந்துவீச்சில் வெளியேறினார்.

யாரும் ஆடவில்லை

யாரும் ஆடவில்லை

அதன் பின்னர் ரிஷப் பண்டை தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆட வில்லை. கீமோ பால் 3, அக்சர் பட்டேல் 4 ரன்களுக்கு வெளியேறினர்.

பண்ட் ஆட்டம்

பண்ட் ஆட்டம்

இளம் வீரர் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி தலா 7 சிக்சர், 7 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 78 ரன்களை குவித்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். ராகுல் தேவ்தியா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆக, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது டெல்லி.

ரோகித் 14 ரன்கள்

ரோகித் 14 ரன்கள்

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 14, குயின்டன் டி காக் 27, சூர்யகுமார் யாதவ் 2 என சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் யுவராஜ் சிங்-பொல்லார்ட் இணை சேர்ந்து ரன்களை குவித்தனர்.

யுவராஜ் 53

யுவராஜ் 53

எனினும் பொல்லார்ட் 21 ரன்களுக்கும், ஹார்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர். நிலைத்து ஆடி வந்த யுவராஜ் 35 பந்துகளில் 53 ரன்களை குவித்து வெளியேறினார். மெக்கிலேனகன் 10 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

7வது ஆண்டாக தோல்வி

7வது ஆண்டாக தோல்வி

இறுதியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து மும்பை அணி 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7வது ஆண்டாக மும்பை ஒரு சாதனையை செய்துள்ளது.

ரசிகர்கள் வெறுப்பு

ரசிகர்கள் வெறுப்பு

ஒவ்வொரு தொடரின் அந்த அணி ஆடும் தொடக்க போட்டியில் தோல்வியை தழுவி வருகிறது. நேற்றைய ஆட்டத்தின் போதும் அந்த சோகம் தொடர்ந்தது. தொடர்ந்து 7வது ஆண்டாக அந்த அணி தாம் சந்தித்த முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து ரசிகர்களை வெறுப்பேற்றிருக்கிறது.

Story first published: Monday, March 25, 2019, 10:35 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+