Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயோ பபுளா..?? நமக்கு ஒத்து வராது..!! ஐ.பி.எல். ஏலத்திலிருந்து விலகிய அம்பானி மனைவி..?

மும்பை: ஐ.பி.எல். ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணியின் குழுவும் பெங்களூரு வந்தடைந்தன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். ஏலமும் பயோ பபுள் விதியில் நடைபெற உள்ளது.

இதற்காக ஏலத்தில் பங்கேற்க இருந்த அணியின் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பயோ பபுள்

பயோ பபுள்

இதனையடுத்து, அணி நிர்வாகிகள் அனைவரும் ஹோட்டல் அறையில் அடைந்தனர். மூன்று நாட்களுக்கு எந்த அணி நிர்வாகிகளும் ஹோட்டலை விட்டு வெளியேற கூடாது. பயோ பபுளுக்கு வெளியே இருக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் அவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள கூடாது.

நீத்தா அம்பானி

நீத்தா அம்பானி

இந்த விதியில் தான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ஆனால் நாட்டிலேயே பெரும் பணக்காரர்களுக்கு இந்த விதி ஒத்து வருமா என்ன? அதனால் இம்முறை ஏலத்தில் பங்கேற்கவில்லை என்று நீத்தா அம்பானி கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏலம் தொடர்பாக எந்த விவகாரத்திலும் தலையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

ஏலம் நடைமுறைகள் அனைத்தையும் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியே கவனித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகாஷ் அம்பானிக்கு பக்க பலமாக பயிற்சியாளர் ஜெயவர்தனே, முன்னாள் கிரிக்கெட் வீரர் வினய் குமார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

சிறப்பு ஏற்பாடு

சிறப்பு ஏற்பாடு

மொத்தம் 5 நாள் ஐ.பி.எல். அணி நிர்வாகிகள் பயோ பபுளில் உள்ளனர். அணி நிர்வாகிகளுக்கு உலகத்தர வசதிகளை செய்து தர பி.சி.சி.ஐ. சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. யோகா வகுப்பு, சிறிய அளவிலான இசை நிகழ்ச்சி, வீடியோ கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேசன் என அனைத்து வசதிகளும் பயோ பபுளில் உள்ள அணி நிர்வாகிகளுக்கு பி.சி.சி.ஐ. செய்து தந்துள்ளது.

Story first published: Saturday, February 5, 2022, 12:59 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+