Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸில் இருந்து லசித் மலிங்கா நீக்கம்.. ஐபிஎல் தொடருக்கு முன் 3 பயிற்சியாளர்கள் அவுட்

மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான லசித் மலிங்கா உட்பட 3 முக்கிய பயிற்சியாளர்கள் தங்களது பதவிகளில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்கா, கூடுதல் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் கார்ல் ஹாப்கின்சன் ஆகிய மூவரும் அணியை விட்டு விலகுவதாக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கும் சிறந்த உழைப்பிற்கும் அந்த அணி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடை கொடுத்துள்ளது.

Mumbai Indians Part Ways With Lasith Malinga and Coaching Staff Ahead of IPL 2027

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்ந்த லசித் மலிங்கா, சுமார் 11 ஆண்டுகள் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராகக் களமிறங்கி கோப்பைகளை வென்று தந்தார். பின்னர் 2018 சீசனில் பந்துவீச்சு ஆலோசகராக மாறினார். 2024 ஐபிஎல் சீசனில் அப்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் விலகிய பிறகு மலிங்கா முதன்மை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் நீண்ட கால உறவுக்குப் பிறகு அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடைபெற்று இருக்கிறார். பராஸ் மாம்ப்ரே கடந்த 2025 சீசனிலும், கார்ல் ஹாப்கின்சன் கடந்த 3 ஆண்டுகளாகவும் பொறுப்பில் இருந்தனர். தலைமைப் பயிற்சியாளராக இருந்த மகிலா ஜெயவர்த்தனே மாற்றப்பட்டு, பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கீரன் பொல்லார்ட் அண்மையில் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்குள் நுழைந்ததே பெரிய விஷயம்.. அவரை..”.. அஜின்க்யா ரஹானே பேச்சு

“புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்குள் நுழைந்ததே பெரிய விஷயம்.. அவரை..”.. அஜின்க்யா ரஹானே பேச்சு

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தில் சச்சின் டெண்டுல்கர் வழிகாட்டியாகவும், ராகுல் சாங்வி கிரிக்கெட் இயக்குநராகவும் தொடர்ந்து நீடிக்கின்றனர். 2027 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிற்கு புதிய பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. அடுத்த சீசனில் சாம்பியன் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Story first published: Thursday, October 29, 2026, 16:45 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+