Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் தயவு இல்லாமல் எதுவும் முடியாது.. இப்போ என்ன பண்ணுவீங்க கோலி.. ரோஹித் சர்மாவின் அதிரடி!

சென்னை: இந்திய டி 20 அணியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மும்பை அணியை சேர்ந்த வீரர்கள் பலர் இந்த முறையில் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை முழுக்க நடந்த மீட்டிங்கிற்கு பின் நேற்று இரவு இந்திய அணி அறிவிக்கப்பட்டது .

இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்யா குமார், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் தற்போது சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எல்லாம் அணியில் எடுக்கும் விருப்பம் முன்பு கோலிக்கு இல்லை. முதலில் ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கவே கோலி விரும்பினார்.

எப்படி

எப்படி

இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் கோலி நினைத்தது போல சஞ்சு, ஷ்ரேயாஸ் இரண்டு பேருமே பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை, ஜடேஜா, பாண்டியா மட்டுமே இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் காப்பாற்றினார்கள்.

மும்பை வீரர்கள்

மும்பை வீரர்கள்

இந்த நிலையில் தற்போது வேறு வழியின்றி சூர்ய குமார் யாவிற்கும், இஷான் கிஷானுக்கும் கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். இரண்டு பேருமே முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடி வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

தான் அறிமுகப்படுத்திய வீரர்கள் சரியாக ஆடாத காரணத்தால் கோலி இவர்கள் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்து இருக்கிறார். ரோஹித் சர்மா மூலம்தான் இந்திய அணிக்குள் பும்ரா, பாண்டியா இரண்டு பேருமே வந்தனர். இந்த நிலையில் மீண்டும் மும்பை வீரர்கள் இந்திய அணிக்குள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

ஈகோ

ஈகோ

தொடக்கத்தில் ஈகோ காரணமாக இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை கோலி தவிர்த்து வந்தார். ஆனால் தற்போது கோலியும் கூட இவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். 2021 உலகக் கோப்பை தொடர் வருவதால் நல்ல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க கோலி முடிவு செய்துள்ளார்.

Story first published: Monday, February 22, 2021, 8:38 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+