
மும்பை -டெல்லி அணிகள் மோதல்
ஐபிஎல் 2020 போட்டிகள் இப்பொழுது தான் துவங்கியது போல உள்ளது. ஆனால் 50க்கும் மேற்பட்ட லீக் போட்டிகளையும் ப்ளே-ஆப் சுற்றுகளையும் கடந்து நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நாளைய போட்டியில் மோதவுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் தீவிரம்
இந்த இறுதிப்போட்டியில் தங்களின் 5வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக உள்ளது. இதேபோல முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் தங்களுடைய முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

கடுமையான வலைப்பயிற்சி
இந்நிலையில் நாளைய இறுதிப்போடடியில் சிறப்பாக விளையாடும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடுமையான வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சீசன் முழுவதிலும் சிறப்பான ஆட்டங்களை அந்த அணி வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

டிவிட்டர் பக்கத்தில் வெளியீடு
இந்த வலைப்பயிற்சியின் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அணியின் அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பாக வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்டோர் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பும்ரா மற்றும் போல்ட்
இந்த சீசனில் மும்பை இந்தியன்சின் முக்கிய வீரர்களாக பும்ரா மற்றும் போல்ட் காணப்படுகின்றனர். அவர்கள் மட்டுமின்றி ஹர்திக் பாண்டியா மற்றும் கீரன் பொல்லார்ட்டும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நடப்பு சாம்பியன்களாக இருந்தாலும் தொடர்ந்து முன்னிலை வகித்தாலும் நாளைய போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அந்த அணியின் அர்ப்பணிப்பு இந்த வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











