Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs CSK :தெறிக்க விட்ட சென்னை பவுலர்கள்..! முதலில் திணறி.. இறுதியில் 170 ரன்களை குவித்த மும்பை

Recommended Video

சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி

மும்பை:ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலில் திணறினாலும் ஹர்திக் பாண்டியா அதிரடியால் 170 ரன்களை குவித்துள்ளது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 15வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் களம் கண்டுள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் இருந்து மிட்செல் சா அண்டர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2 பேர் சேர்ப்பு

2 பேர் சேர்ப்பு

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மிட்செல் மெக்லெங்கன் மற்றும் மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ராகுல் சாஹர் மற்றும் பெஹண்ட் ரூஃப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

டி காக் ஆட்டமிழப்பு

டி காக் ஆட்டமிழப்பு

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன் தான் எடுக்க முடிந்தது. 2வது ஓவரிலும் ஒரு ரன் கிடைத்தது. 3வது ஓவரில் சாஹர் பந்தில் டி காக் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.

ரோகிக் அவுட்

ரோகிக் அவுட்

4வது ஓவரில் ரோகித்தும், சூர்ய குமார் யாதவும் மட்டையை சுழற்ற அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது. ஜடேஜாவின் ஓவரில் ரோகித், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அபார கேட்ச்

அபார கேட்ச்

அதன் பின்னர் யுவராஜும், சூர்யகுமார் யாதவ்வும் ஆட்டத்தை தொடர்ந்தனர். அந்த ஜோடியும் நிலைக்கவில்லை. இம்ரான் தாஹிர் பந்தை யுவராஜ் சிக்சருக்கு தூக்கி அடிக்க.... அம்பத்தி ராயுடு அற்புதமாக கேட்ச் பிடித்தார்.

 குருணால் பாண்டியா அவுட்

குருணால் பாண்டியா அவுட்

4 வது விக்கெட்டுக்கு கை கோர்த்த, சூர்யகுமார் யாதவும், குருணால் பாண்டியாவும், நிதானமாக ஆடினர். அணியை இருவரும் சரிவில் இருந்து மீட்டனர். 50 ரன்கள் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குருணால் பாண்டியா 42 ரன்களில் வெளியேறினார்.

சூர்யகுமார் அரைசதம்

சூர்யகுமார் அரைசதம்

அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். மறு முனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ், அரைசதம் கடந்தார். அருமையாக ஆடிய அவர், பிராவோ பந்தில் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் ரன் குவிக்க முயன்றது.

171 ரன்கள் இலக்கு

171 ரன்கள் இலக்கு

இறுதி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா வெளுக்க 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்தது. இந்த ரன்கள் போதுமானது என்றாலும் பந்துவீச்சில் கவனம் செலுத்தினால் சென்னை அணிக்கு அதிக நெருக்கடி கொடுக்க முடியும்.

Story first published: Wednesday, April 3, 2019, 22:04 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+