For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KXIP vs MI:பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை... கெயில் சூறாவளி கலக்குமா?

மொகாலி:மொகாலியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும். நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணையை வெளியிடவில்லை. இந்நிலையில் மொகாலியில் 9வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் களம் கண்டன.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

போட்டியில் டாஸ் வென்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு உள்ளார்.

ஒரு ஓவர் சர்ச்சை

ஒரு ஓவர் சர்ச்சை

தொடக்க வீரர்களாக ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். அதுவும் 7 பந்துகள் வீச, அது ஒருபக்கம் சர்ச்சையாகி போனது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

அதையடுத்து, ரோகித்தும், டி காக்கும் நிதானமாக ஆட தொடங்கினர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி எளிதாக 50 ரன்களை எடுத்திருந்தது. ரோகித்தும், டி காக்கும் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

ஸ்கோர் 51 ரன்களாக இருந்த போது ரோகித், வில்ஜோன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட் இழப்புகளால் மும்பை அணி தடுமாறியது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

3வது விக்கெட்டுக்கு காக்குடன் கை கோர்த்தார் அதிரடி மன்னன் யுவராஜ் சிங். இருவரும் பஞ்சாப் பந்துகளை அடித்து ரன்களை குவித்தனர். டி காக் அருமையாக ஆடி 60 ரன்கள் குவித்தார். ஸ்கோர் 120 ரன்களை எட்டிய போது அவரும் ஆட்டமிழந்தார்.

யுவராஜ் அவுட்

யுவராஜ் அவுட்

அவருக்கு பின் வந்த யுவராஜூடன் பொல்லார்டு கைகோர்க்க... ரசிகர்கள் உற்சாகமாகினர். ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 18 ரன்களில் வெளியேறினார். அவரை போன்றே ஆனால் அவசரப்பட்டு அடித்து ரன்கள் குவிக்க வேண்டும் என்றிருந்த பொல்லார்டு ஆட்டமிழந்தார்.

ரன்கள் இலக்கு

ரன்கள் இலக்கு

அடுத்தடுத்த விக்கெட்டுகளால் மும்பை அணியின் ரன் விகிதம் குறைந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் இழப்பு, ரன் குவிக்க வேண்டும் என்ற அவசரம் காரணமாக மும்பை அணி பேட்டிங்கில் ஒருவித பதற்றம் காணப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது.

Story first published: Saturday, March 30, 2019, 18:22 [IST]
Other articles published on Mar 30, 2019
English summary
Mumbai Indians scored 176 runs in their first innings against kings xi Punjab.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+