For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபில்.. கொல்கத்தாவை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

By Veera Kumar

கொல்கத்தா: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்தது. ஆனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 63 ரன்களும், சவுரப் திவாரி 52 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Mumbai Indians scores of 173/5 against KKR

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ரன் ரேட் நன்றாக இருந்தபோதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 33 ரன்கள் விளாசினார்.

இதனால் புள்ளி பட்டியலில் மும்பை தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

Story first published: Sunday, May 14, 2017, 0:11 [IST]
Other articles published on May 14, 2017
English summary
Vinay Kumar chipped in with his second wicket to leave Gautam Gambhir‘s team reeling in their pursuit of Mumbai Indians’ score of 173/5.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+