Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 9 மாதம் இருக்கு.. அதற்குள் மும்பை அணி செய்த காரியம்.. இங்கி. தொடர்ந்து 4 போட்டியில் வெற்றி

லண்டன் : ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு படு மோசமாக இருந்தது .
இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் பழைய பலத்துடன் திரும்பி வருவோம் என ரோகித் சர்மா கூறியிருந்தார்.

இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்து பயணம்

மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது இரண்டாம் லெவன் அணி மற்றும் அடுத்த சீசனுக்கு தேவைப்படும் இளைஞர்களை தேர்வு செய்து தற்போது தொடர் ஒன்றில் விளையாடி வருகிறது. ரிலையன்ஸ் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இரண்டாம் தர வீரர்களை வைத்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வாரம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

மும்பை அணி வீரர்கள்

மும்பை அணி வீரர்கள்

உனாட்கட் தலைமையிலான மும்பை அணியில் திலக் வர்மா குமார், கார்த்திகேயா, ரித்திக் , மாயக் மார்க்கண்டே, ராகுல் புத்தி, ரமந்தப் சிங், அன்மோல் ப்ரீத் சிங், பாஷில் தம்பி ,முருகன் அஸ்வின், ஆரியன் ஜோயல் ,ஆகாஷ், அர்ஷத் கான் ,அர்ஜுன் டெண்டுல்கர், டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்தத் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் சீசன் முடிவுக்கு வந்துவிட்டது.

ஜெயவர்த்தனே கருத்து

ஜெயவர்த்தனே கருத்து

சீனியர்கள் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.இதனால் இளம் வீரர்களை கவனித்து அவர்களுக்கு பயிற்சி வழங்குவது மிகவும் முக்கியம். இளம் வீரர்கள் மூன்று நான்கு மாதத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டியிலும் தற்பொழுது விளையாடவில்லை. இதனால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இளைஞர்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட பயிற்சி வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.

 கெண்ட் அணிக்கு எதிரான போட்டி

கெண்ட் அணிக்கு எதிரான போட்டி

தற்போது வரை இங்கிலாந்து மண்ணில் நான்கு டி20 போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணி நான்கிலும் வென்றுள்ளது. கெண்ட் அணியுடன் மோதிய மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கெண்ட் அணி 144 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்தது. மும்பை தரப்பில் ஜெய்தேவ் உனாட்கட், பவான் நெகி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 அமோல்பிரித் சிங் 81*

அமோல்பிரித் சிங் 81*

இதனை அடுத்து 146 ஆண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் அமோல்பிரித் சிங் மற்றும் ஆரியன் ஜோயல் விக்கெட்டுகள் இழப்பின்றி 16.4 ஓவரில் வெற்றி இலக்கு எட்டினர். இதில் அமோல் பிரீத் சிங் 81 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டர்களும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று கெண்ட் அணியுடன் இரண்டாவது போட்டியில் மும்பை அணி அடுத்த 11 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது .

 கார்த்திகேயா 4 விக்கெட்டுகள்

கார்த்திகேயா 4 விக்கெட்டுகள்

இதில் மும்பை அணி முதலில் விளையாடி 20 ஓவருக்கு 165 ரன்கள் எடுத்தது. இதில் ராகுல் புத்தி 52 ரன்கள் அடித்தார். 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் கெண்ட் களமிறங்கியது. 82 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்று பலமான நிலையில் அந்த அணி இருந்தபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.இதில் கார்த்திகேயா சிங் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

Story first published: Tuesday, July 19, 2022, 19:25 [IST]
Other articles published on Jul 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+