Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்... முதல் போட்டியின் தோல்விக்கு பழிவாங்குமா மும்பை?

ஷார்ஜா : சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் ஷார்ஜாவில் இன்று ஐபிஎல்லின் 41வது போட்டி நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் முதல் போட்டியில் இரு அணிகளும் மோதிய நிலையில், சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டது.

இந்நிலையில் தற்போது 40 போட்டிகளை கடந்து இந்த அணிகள் மீண்டும் மோதவுள்ளன. 3வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி இடத்தில் உள்ள சிஎஸ்கேவை தற்போது எதிர்கொள்ளவுள்ளது.

முதல் போட்டி -சிஎஸ்கே வெற்றி

முதல் போட்டி -சிஎஸ்கே வெற்றி

ஐபிஎல்லின் இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், சிஎஸ்கே அந்த போட்டியில் அபார வெற்றி பெற்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சின் முதல் போட்டியை தோல்வியுடன் ஆரம்பிக்க வைத்தது.

இடத்தில்

இடத்தில்

ஆனால் அதற்கு பிறகு நடைபெற்றதெல்லாம் எதிர்பாராத டிவிஸ்ட். மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து ஏறுமுகமாக முதல் மூன்று இடங்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. தற்போதும் 3வது இடத்திலேயே தொடர்கிறது. இந்நிலையில் சிஎஸ்கேவிற்கு நடந்ததோ ஏமாற்றங்கள் மட்டுமே. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்று இறுதி இடத்தில் உள்ளது.

பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

முதல் போட்டியில் தன்னை வெற்றி கொண்டுள்ள சிஎஸ்கேவை இன்றைய போட்டியில் எதிர்கொள்ளவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொள்ள மிகுந்த முனைப்புடன் காத்திருக்கிறது. இதனிடையே, பிளே-ஆப் சுற்று கனவாகியுள்ள நிலையில், அடுத்துவரும் 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெற சிஎஸ்கேவும் தீவிரம் காட்டுகிறது.

எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

கடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனிடையே கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வெகு எளிதாக வெற்றியை பறிகொடுத்தது சிஎஸ்கே. இந்நிலையில் இரு அணிகளின் இன்றைய போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Story first published: Friday, October 23, 2020, 10:21 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+