எங்க போய் படுத்து ஓய்வெடுக்கறாரு... குடுத்து வச்ச மனுஷன்.. ரசிகர்கள் கமெண்ட்
துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அணியின் கீரன் பொல்லார்ட் இந்த ஐபிஎல் சீசனில் முக்கியமான பங்கு வகித்து வருகிறார். கேப்டன் ரோகித் சர்மா இல்லாத போட்டிகளில் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
இந்நிலையில் அவர் தனது மனைவியின் மடியில் படுத்து ஓய்வெடுக்கும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனின் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி தொடர்ந்து சிறப்பான போட்டிகளை அளித்த நிலையில் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

எந்த அணி மோதும்?
வரும் செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் வெற்றி பெறும் அணி மும்பை அணியுடன் மோதும்.

சிறப்பான பங்களிப்பு
மும்பை அணியின் துணை கேப்டன் கீரன் பொல்லார்ட் இந்த சீசனில் மிக சிறப்பான பங்களிப்பை அந்த அணிக்கு அளித்துள்ளார். காயம் காரணமாக அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடையில் 4 போட்டிகளில் இடம்பெறாத நிலையில் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்று வெற்றிகளை குவித்தார்.
புயலுக்கு முன்னே அமைதி
வரும் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டியில் மும்பை வீரர்கள் விளையாடவுள்ள நிலையில், தற்போது சிலர் ஓய்வும் சிலர் பயிற்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அணியின் கீரன் பொல்லார்ட் தன்னுடைய மனைவியின் மடியில் படுத்து அமைதியாக ஓய்வெடுத்த புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் கமெண்ட்
மேலும் புயலுக்கு முன்னே அமைதி என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்களின் கமெண்ட்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன . அழகான தம்பதி என்றும் அழகாக இருக்கிறார்கள் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications