மும்பைக்கு இப்போவே கப் கொடுத்திருங்க.. என்ன மாதிரி பவுலரை எடுத்திருக்காங்க! நடுங்க போகும் பேட்ஸ்மேன்
கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணி 2 டாப் வீரர்களை வாங்கி , மற்ற அணிகளை நடுங்க வைத்திருக்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே மும்பை அணி பலமான வீரர்களை ஏற்கனேவே செட் செய்து இருந்தது.
இந்த ஏலத்தை பயன்படுத்தி கொண்டு, பொலார்டுக்கு மாற்றாக ஆல் ரவுண்டரை மும்பை அணி எடுக்கும் முனைப்பில் களமிறங்கியது. ஏலம் தொடங்கியதும், மும்பை அணி முதலில் சாம் கரணை, குறிவைத்தது.
ஆனால், விலை அதிகமாக மும்பை அணி பின் வாங்கியது. இதனையடுத்து, கேமிரான் கிரீன் வந்ததும். மும்பை அணி கோதாவில் குதித்தது.

பலமான பேட்டிங்
அதிரடியாக விலை கேட்ட ஆகாஷ் அம்பாணி, கேரின் கிரினை 17 கோடி ரூபாய் 50 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார். இதன் மூலம் கேமிரான் கிரினை மும்பை வீரர்கள் நடுவரிசை அல்லது தொடக்க வீரராக கூட களமிறங்கலாம். ஏற்கனவே மும்பை அணியில் இஷான் கிஷன், ரோகித், டிவால்ட் பிரவீஸ், ஸ்டப்ஸ், டிம் டேவிட் , சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என பேட்டிங் வரிசைபலமாக இருக்கிறது.

மிரட்டலான பந்துவீச்சு
இதனை விட மும்பை அணியை பார்த்து மற்ற வீரர்கள் பயப்படுவதே அவர்களுடைய பந்துவீச்சை பார்த்து தான். மும்பை அணியில் ஏற்கனவே பும்ரா, ஜோப்ரா ஆர்சர் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில் ஏலத்திற்கு முன்பே பெங்களூரு அணியிடம் ஜேசன் பெகுரண்டப்பையும் மும்பை அணி வாங்கியது. தற்போது ஏலத்தில் மற்றொரு பயங்கரமான வேகப்பந்துவீச்சாளரை மும்பை தட்டி தூக்கி இருக்கிறது.

யாக்கர் வல்லவர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சர்ட்சன், அதிவேகமாக யாக்கர்கள் வீசி விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர். அதுவும் தற்போது நடந்து வரும் பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். அவர் வீசும் யாக்கர்கள் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தவறை சரி கட்டியது
கடந்த 2 சீசனில் மும்பை அணியில் பும்ராவுக்கு ஆதரவாக எந்த பந்துவீச்சாளர்களும் சரியாக செயல்படவில்லை. ஒரு முனையில் பும்ரா ரன்களை கட்டுப்படுத்தினால், மறு முனையில் மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். தற்போது டிரிண்ட் பொல்ட்டும் இல்லாததால், மும்பை அணி 2 வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை இறக்கியுள்ளது. இதன் மூலம் மும்பை அணியின் பலம் பலமடங்கு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications