Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரேயடி.. ரெண்டு துண்டாக பிளந்த ஸ்டம்ப்... டிரெண்ட் போல்ட்டின் அதிரடி ஸ்டம்ப் அவுட்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் உள்ளிட்ட 8 ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்களும் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர் டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டவர்கள் தங்களது பௌலிங் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தின்போது, டிரெண்ட் போல்ட் போட்ட பந்து ஒன்று அதிரடியாக நடு ஸ்டெம்பின் மீது பட்டு தெறித்ததில் அது இரண்டாக உடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

19ம் தேதி துவக்கம்

19ம் தேதி துவக்கம்

வரும் 19ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் சீசன் 2020க்காக துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் மிகவும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே மோதல்

மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே மோதல்

சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சிஎஸ்கே அணியுடன் மோதவுள்ள நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டவர்கள் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அணியின் தலைமை பயிற்சியாளர் மகேளா ஜெயவர்த்தனே தலைமையில் வீரர்கள் சிறப்பு ஆலோசனைகளின்படி பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டம்பை இரண்டாக உடைத்த போல்ட்

ஸ்டம்பை இரண்டாக உடைத்த போல்ட்

இந்நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், போட்ட பந்து ஒன்று நடு ஸ்டம்பின் மீது பட்டு தெறித்து அதை இரண்டாக உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

5வது கோப்பை.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

5வது கோப்பை.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா, இந்த சீசனில் சொந்தக் காரணங்களால் விலகியுள்ளார். ஆயினும் அணியில் இடம்பெற்றுள்ள ஜஸ்பிரீத் பும்ரா, மிட்செல் மெக்கிளெனகன் மற்றும் டிரெண்ட் போல்ட் போன்றவர்களின் நிலையான ஆட்டத்தால் அந்த அணி தன்னடைய 5வது கோப்பையை இந்த முறை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, September 13, 2020, 16:19 [IST]
Other articles published on Sep 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+