Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2019:வெற்றி, தோல்வி...! லீக் முதல் பைனல் வரை களம் கண்ட சாம்பியனான மும்பை அணியின் பயணம்

Recommended Video

IPL 2019 FINALS CHENNAI VS MUMBAI | 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை அணி

ஹைதராபாத்:4வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள மும்பை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஐபிஎல் 2019ல் தொடக்கம் முதலே மும்பை அணி வெற்றி, தோல்விகளை மாறி, மாறி சந்தித்திருக்கிறது. அதனை காணலாம்.

4வது முறை சாம்பியன்... 24 கோடி ரூபாய் பரிசு என படு உற்சாகத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். பரபரப்பான இறுதிப்போட்டியில் 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை அள்ளியிருக்கிறது. ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

ஐபிஎல் 2019ல் மும்பை அணியின் பயணம், வெற்றி, தோல்விகளை மாற்றி, மாற்றி சந்தித்திருக்கிறது. லீக் சுற்றில் டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும், பெங்களூருக்கு அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டிருக்கிறது.

வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

பஞ்சாப் அணியுடனான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, சென்னைக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதரா பாத் அணியுடன் நடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை.

ராஜஸ்தானிடம் தோல்வி

ராஜஸ்தானிடம் தோல்வி

அதேபோல, பஞ்சாப் அணியுடனான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன் பின்னர் பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ராஜஸ்தானுடன் வெற்றி

ராஜஸ்தானுடன் வெற்றி

பின்னர் மீண்டும் டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி. அதற்கு பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சென்னை அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை, கொல்கத்தாவிடம் தோற்றது.

சூப்பர் ஓவர் வெற்றி

சூப்பர் ஓவர் வெற்றி

ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியும், பின்னர் கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அதன் பின்னர் சென்னை அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இறுதிப்போட்டியில் இதே சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியானது மும்பை இந்தியன்ஸ்.

Story first published: Monday, May 13, 2019, 10:15 [IST]
Other articles published on May 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+