மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை என்ற தகவல் வெளியானது. அவருக்குப் பதிலாக பாப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அவரே டாஸ் போடும் நிகழ்வுக்கும் வந்தார்.
டாஸ் வென்ற பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் பேசுகையில், "அக்சர் படேல் கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை இன்று நாங்கள் நிச்சயம் இழந்ததை உணர்வோம். இன்று நல்ல அணியுடன் விளையாடுகிறோம். அதற்கு எதிராக நன்றாக விளையாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்."

"கடந்த ஐந்து ஆறு போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகள் இருக்கும். இங்கு ஆடுகளம் நன்கு காய்ந்து போயிருக்கிறது. நாங்கள் சேசிங் செய்யப் போகிறோம். அக்சர் படேல் விளையாடவில்லை, அவர் இரண்டு வீரர்களுக்கு சமமாவார். அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது மிகவும் கடினமான காரியம். எப்படி செல்கிறது என்று பார்ப்போம்," என்று தெரிவித்தார் பாப் டூ பிளெஸ்ஸிஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கார்பின் போஸ்க்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.
அணிகள்:
டெல்லி கேபிடல்ஸ் (விளையாடும் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், துஷ்மந்தா சமீரா, முஸ்தஃபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்
டெல்லி கேபிடல்ஸ் இம்பாக்ட் சப்: கே.எல். ராகுல், செதிகுல்லா அடல், கருண் நாயர், திரிபுரானா விஜய், மன்வந்த் குமார் எல்
மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்): ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் சப்: கர்ன் ஷர்மா, கார்பின் போஷ், ராஜ் பாவா, அஸ்வினி குமார், சத்யநாராயணா ராஜு