Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தந்த தோல்வியால் அவமானத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ்.. வான்கடேவில் 19 ஆண்டு மோசமான சாதனை

மும்பை: ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இந்த 2026 ஐபிஎல் தொடர் மறக்க முடியாத சோகமாக மாறியுள்ளது. சிஎஸ்கே-விடம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை நிலைகுலைத்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் (54 பந்துகளில் 101 ரன்கள்) 207 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் வெறும் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மண்ணைக் கவ்வியது. சிஎஸ்கே தரப்பில் அகீல் ஹொசைன் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பையைச் சிதைத்தார்.

Mumbai Indians Wankhede Fortress Crumbles after loss to CSK MI Suffers Worst Home Run in 19 Years

இந்தத் தோல்வியின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத ஒரு மோசமான சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. வான்கடே மைதானத்தில் விளையாடிய கடந்த 3 போட்டிகளிலும் அந்த அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்த 19 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில், தனது சொந்த மண்ணில் மும்பை அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

நடப்பு சீசனில் மார்ச் 29 அன்று கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை வெற்றி பெற்றது. ஆனால், அதற்குப் பிறகு ஏப்ரல் 12-ல் பெங்களூரு அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்திலும், ஏப்ரல் 16-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது. தற்போது சிஎஸ்கே-விடம் பெற்ற இந்த 103 ரன்கள் தோல்வி, அந்த அணியின் ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையைச் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த 40 போட்டிகளில் 19-ல் சென்னை வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 18 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, வான்கடே மைதானத்தில் மும்பையை அதிகமுறை (6 முறை) வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாதனையையும் தற்போது சிஎஸ்கே அணி சமன் செய்துள்ளது.

ஒரு காலத்தில் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கடினமான காரியமாக இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, தற்போது தனது சொந்த மைதானத்திலேயே மற்ற அணிகளிடம் தோற்று வருவது அந்த அணியின் சரிவையே காட்டுகிறது. இந்த வரலாற்றுச் சரிவிலிருந்து மும்பை அணி மீண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, April 24, 2026, 18:41 [IST]
Other articles published on Apr 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+