Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது!

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 33 ரன்களில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு 10 அணிகள் இடையிலான 5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெற்றன. இறுதிப் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார்.

டெண்டுல்கர்

டெண்டுல்கர்

தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் டெண்டுல்கரும் மும்பை அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். தமது கடைசி 20 ஓவர் போட்டியில் ஆடியதால் டெண்டுல்கர் பேட் செய்தபோதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளந்தது. வாட்சனின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்வித்த அவர் அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

ஹாட்ரிக் பவுண்டரி

ஹாட்ரிக் பவுண்டரி

அந்த அணியின் ஸ்மித், வாட்சனின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். அவர் 39 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார்.

20 ஓவரில் 202 ரன்கள்

20 ஓவரில் 202 ரன்கள்

மும்பை அணி வீரர்கள், ராஜஸ்தானின் பந்தை அடித்து நொறுக்கித் தள்ளினர். பவுண்டரியும், சிக்சரும் பறந்தன. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்தது.

கடைசி 10 ஓவரில் 142 ரன்கள்

கடைசி 10 ஓவரில் 142 ரன்கள்

முதல் 10 ஓவரில் 60 ரன்களை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசி 10 ஓவர்களில் மட்டும் 142 ரன்களை அதிரடியாகக் குவித்தது. சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே குசால் பெரேராவின் விக்கெட்டை பறிகொடுத்தது.

ரஹானே- சஞ்சு சாம்சன் கூட்டணி

ரஹானே- சஞ்சு சாம்சன் கூட்டணி

பின்னர் ரஹானேவும், சஞ்சு சாம்சனும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மும்பை அணியின் அதிரடியைப் போல ராஜஸ்தான் வீரர்களும் வெளுத்து வாங்கினர்.

9 ஓவரில் 100 ரன்கள்

9 ஓவரில் 100 ரன்கள்

9 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ரன்களை கடந்து மும்பையை அதிர வைத்தது.

திருப்புமுனை ஏற்படுத்திய சாம்சன் அவுட்

திருப்புமுனை ஏற்படுத்திய சாம்சன் அவுட்

இப்படி ஆட்டம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில் ஸ்கோர் 117 ரன்களை எட்டிய போது சாம்சன் ஓஜாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இது தான்ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஓங்கிய மும்பை கை

ஓங்கிய மும்பை கை

இதன் பின்னர் மும்பை சுழற்பந்து வீச்சாளர்களின் பிடி இறுகவே ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பு வேகம் கட்டுக்குள் வந்து பின்னர் குறைந்தே போனது.

1 ரன் டிராவிட்

1 ரன் டிராவிட்

பின்வரிசையில் இறங்கிய கேப்டன் டிராவிட்டாலும் ஒரே ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார்.

33 ரன்களில் வெற்றி

33 ரன்களில் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைப் பெற்றது.

2வது முறை

2வது முறை

மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டும் கோப்பையை கைப்பற்றியது.

டெண்டுல்கருக்கு சமர்ப்பணம்

டெண்டுல்கருக்கு சமர்ப்பணம்

இந்த கோப்பையை வென்று டெண்டுல்கருக்கு சமர்ப்பிப்போம் என்று ஏற்கெனவே மும்பை வீரர்கள் அறிவித்திருந்தனர். ஒரே ஆண்டில் ஐ.பி.எல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இரண்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.

ரூ.15 கோடி பரிசு

ரூ.15 கோடி பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த ராஜஸ்தானுக்கு ரூ.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ரஹானேவுக்கு தங்க பேட்

ரஹானேவுக்கு தங்க பேட்

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த ராஜஸ்தான் வீரர் ரஹானேவுக்கு தங்க பேட்டும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் பவுலர் 41 வயதான தாம்பேவுக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. மும்பை வீரர்கள் ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருதையும், வெய்ன் சுமித் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Story first published: Monday, October 7, 2013, 11:02 [IST]
Other articles published on Oct 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+