Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வருஷம் முடிஞ்சாச்சு... நூறு வருஷம் வாழணும்... மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து.. யாருக்குன்னு பாக்கலாமா?

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளின் இயக்குநரின் 3வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு அந்த அணி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

மூன்று வருடங்கள் கடந்து விட்டது என்றும் இன்னும் ஆயுள் முழுவதும் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் கோப்பையை வென்று தன்னுடைய 5வது ஐபிஎல் வெற்றியை உறுதி செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

சிறப்பாக விளையாடிய மும்பை அணி

சிறப்பாக விளையாடிய மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி, கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் தன்னுடைய 5வது கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் சிறப்பான செயல்பாட்டினை காட்டினர்.

வாழ்த்து தெரிவித்த மும்பை அணி

வாழ்த்து தெரிவித்த மும்பை அணி

தன்னுடைய அணி வீரர்களை அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்நிலையில் அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாட்டிற்கான இயக்குநர் ஜாகீர் கானின் 3வது ஆண்டு திருமண தினத்தையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சிறப்பாக வாழ வாழ்த்து

சிறப்பாக வாழ வாழ்த்து

3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜாகீர் தனது மனைவியுடன் இணைந்திருக்கும் அழகான புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளது.

மாடல்... நடிகை... தடகள வீராங்கனை

மாடல்... நடிகை... தடகள வீராங்கனை

கடந்த 2017ல் பிரபல மாடல் மற்றும் நடிகையான சகரிகா காட்கேவை திருமணம் செய்தார் ஜாகீர் கான். காட்கே 'சக் தே இந்தியா' என்ற பிரபல பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தேசிய அளவிலான தடகள வீராங்கனை. இதனிடையே ஜாகீர் கான் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் இந்திய அணிக்காக 309 போட்டிகளில் விளையாடி, 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள்

அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள்

2011ல் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த அணியில் ஜாகீரும் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல்லில் ஆர்சிபி, டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது மும்பை அணிக்காக அவர் பணியாற்றி வருகிறார். அந்த அணியின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணமாக உள்ளார்.

Story first published: Monday, November 23, 2020, 17:06 [IST]
Other articles published on Nov 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+