For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெங்களூருக்கு எதிராக இறுதி கட்டத்தில் பாண்டியா தாண்டவம்... 5 விக். வித்தியாசத்தில் வென்றது மும்பை

மும்பை: பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய பெங்களூரு 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 75 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவருடன் கைகோர்த்த மொயின் அலி 50 ரன்கள் எடுத்தார்.

1
45907

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களம் இறங்கியது. ஏற்கனவே முடிவு பண்ணியது போல கேப்டன் ரோகித்தும், டி காக்கும் அதிரடியாக ஆடினர்.

MI Vs RCB: ஆகா.. மிஸ்டர் 360 அற்புதம்.. மும்பைக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த பெங்களூரு MI Vs RCB: ஆகா.. மிஸ்டர் 360 அற்புதம்.. மும்பைக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த பெங்களூரு

வெகு விரைவில் அதிரடி

வெகு விரைவில் அதிரடி

இருவரும் பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் பறக்க விட்டனர். இருவரின் அதிரடியால் வெகு விரைவில் அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் 28 ரன்களில் வெளியேறினார்.

ஒரு ஓவர், 2 விக்கெட்டுகள்

ஒரு ஓவர், 2 விக்கெட்டுகள்

7வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4வது பந்தில் டி காக்கும் ஆட்டமிழந்தார். 7வது ஓவர் பெங்களூரு அணிக்கு திருப்புமுனையான ஓவர் என்று கூட சொல்லலாம்.

விக்கெட்டுகளால் திணறல்

விக்கெட்டுகளால் திணறல்

3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷன் கிஷனும் 21 ரன்களில் அவுட்டானார். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடி.. விக்கெட்டுகளை இழந்ததால் மும்பை அணி தடுமாறியது.

கணிக்க முடியாத நிலை

கணிக்க முடியாத நிலை

16 ஓவர்கள் முடிவில் 134 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை. 4 ஓவர்களில் 42 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாக கணிக்க முடியாத நிலை உருவானது.

பாண்டியா அவுட்

பாண்டியா அவுட்

5வது விக்கெட்டுக்கு பாண்டியா சகோதரர்கள் கை கோர்த்தனர். இருவரும் கிடைக்கிற பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். 18வது ஓவரில் குருணல் பாண்டியா வெளியேற பெங்களூரு அணி குஷியானது.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

ஆனால்... அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த வீரராக பொல்லார்டு களம் இறங்கினார். அவருக்கு எந்த வாய்ப்பையும் வழங்காத பாண்டியா, 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினார். அந்த ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என 22 ரன்கள் வர... 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது மும்பை.

Story first published: Tuesday, April 16, 2019, 0:12 [IST]
Other articles published on Apr 16, 2019
English summary
Mumbai Indians won the match by 5 wickets against royal challengers Bangalore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X