Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன் குவிக்காமல் சொதப்பிய சிஎஸ்கே... பைனலில் மும்பை.. சூப்பர் சூர்யகுமார் யாதவ்

Recommended Video

IPL 2019: Chennai vs Mumbai | சென்னையை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது மும்பை

சென்னை:ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை, நேரிடையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளெசிஸ் 6 ரன்களுக்கு அவுட் ஆனார்.

1
45946

பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்னை அணிக்கு அதிர்ச்சி துவக்கம் தந்தார். வாட்சனும் 10 ரன்களுக்கு அவுட் ஆகி சென்னை ரசிகர்களை கடுப்பேற்றினார். பின்னர் களமிறங்கிய முரளி விஜய் மற்றும் ராயுடு நிதானமாக ரன்களை சேர்த்தனர். விஜய் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் இணைந்தார்.

131 ரன்கள் சேர்ப்பு

131 ரன்கள் சேர்ப்பு

இந்த ஜோடி சற்று வேகமாக ரன்களை சேர்த்தனர். எனினும் சென்னை அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சென்னை எடுத்தது. தோனி அவுட் ஆகாமல் 37 ரன்களும், ராயுடு அவுட் ஆகாமல் 42 ரன்களும் எடுத்தனர்.

ரோகித் அவுட்

ரோகித் அவுட்

20 ஓவர்கள் கொண்ட போட்டியில் 131 ரன்கள் என்பது எளிய இலக்கு என்ற எண்ணத்தில் மும்பை அணியில் ரோகித்தும், டி காக்கும் களமிறங்கினர். முதல் ஓவரிலே 4 ரன்கள் எடுத்த ஹிட் மேன் ரோகித், சாஹர் பந்தில் அவுட்டாக அரங்கமே அதிர்ந்தது. அதன் பின்னர், 4வது ஓவரில் டி காக்கும் 8 ரன்களில் அவுட்டாக, சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏக குஷி.

பொறுமையான ஆட்டம்

பொறுமையான ஆட்டம்

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவுடன், இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். 28 ரன்களில் கிஷன் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்காக நிலைத்து நின்று ஆடி அணிக்கு நம்பிக்கை ஊட்டியது. மறு முனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்தார்.

6 விக்.வித்தியாசத்தில் வெற்றி

6 விக்.வித்தியாசத்தில் வெற்றி

கிஷன் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த கருணால் பாண்டியாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் திடீரென சென்னை பக்கம் திரும்ப ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் இறுதி வரை களத்தில் இருந்தார் சூர்யகுமார் யாதவ். முடிவில் 18.3 ஓவர்களில் வெற்றிக்கான 132 ரன்களை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நேரிடையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சூர்ய குமார் யாதவ். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இந்த சீசனில் 7 வெற்றிகளை குவித்துள்ளது.

சென்னைக்கு வாய்ப்பு

சென்னைக்கு வாய்ப்பு

அதேநேரம் மும்பை அணிக்கு எதிராக நடந்த 2 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. அதிலும் ஒன்று தன்னுடைய சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது. தற்போது பிளே ஆப் சுற்றிலும் தோற்றிருக்கிறது. இந்த போட்டியில் தோற்ற சென்னை, டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Story first published: Tuesday, May 7, 2019, 23:53 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+