Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டி.. மும்பை அதிரடி வெற்றி!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் மும்பை அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 5 வெற்றிகளுடன் 3 இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணிக்கும் 3 வெற்றிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

Mumbai wins the match against KKR in IPL 2018

நடப்பு சாம்பியனான மும்பை அணி இன்று எப்படி வெற்றி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுவது கஷ்டம் என்ற நிலையில்தான் போட்டி தொடங்கியது. இந்த நிலையில் முதலில் ஆடிய மும்பை தொடக்கத்தில் திணற தொடங்கியது. பின் நிதானமாக ஆடியது.

இந்த போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. எப்போதும் போல மும்பையின் சூர்யா குமார் யாதவ் அதிரடியாக ஆடினார். இவர் 59 ரன்கள் எடுத்தார். அதேபோல் லெவிஸ் 43 ரன்கள் எடுத்தார். மும்பை 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது.

அடுத்த களமிறங்கிய கொல்கத்தா அதிரடியாக ஆடியது. உத்தப்பா 54 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 36 ரன்கள் எடுத்தார். ஆனாலும் கொல்கத்தா 20 ஓவரில் 168 மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Sunday, May 6, 2018, 19:55 [IST]
Other articles published on May 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+