Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20யில் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்.. ஆனால், டெஸ்ட் அப்படி இல்ல..சுப்மன் கில் குறித்து விஜய் கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் சுப்மன் கில் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 890 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இந்த நிலையில் சுப்மன் கில், இந்திய அணிக்காக 18 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5 சதங்களை அடித்திருக்கிறார்.

இதில் ஒரு இரட்டை சதமும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதமும் அடங்கும். இதேபோன்று பார்டர் கவாஸ்கர் தொடரில் சுப்மன் கில், சதமும் அடித்தார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய கில் போட்டியில் இதே ஃபார்மை வெளிப்படுத்துவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Murali vijay says T20 Cricket is much different format from test cricket

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய், டி20 கிரிக்கெட் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு கிரிக்கெட் வடிவம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாட்டை தேர்வு செய்து விளையாடுவதில் ஒரு ஒழுக்கம் வேண்டும். சுப்மன் கில்லை பொறுத்தவரை அடுத்த தலைமுறையின் சிறந்த திறமையான கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.

நிச்சயமாக அவர் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் தான் கடந்த இரண்டு மாதமாக அவர் பிரமாதமாக விளையாடி வருகிறார். அதற்கு அவருடைய மனவலிமையும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்தில் விளையாடும் போது அவர் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அவருடைய முழு திறமையை வெளிப்படுத்த இங்கிலாந்து ஒரு நல்ல மைதானமாக இருக்கும்.

நிதானமாக விளையாடி இந்தியாவுக்கு அவர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்திய அணியில் தற்போது 15 சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் இந்தியாவுக்காக விளையாடினாலே நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் தான். கில் மற்றும் பிரித்விஷாவின் திறமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிச்சயம் அவர்கள் டாப் வீரர்களாக தான் இருக்கிறார்கள் என்று சுப்மன் கில் கூறியுள்ளார்.

Story first published: Monday, June 5, 2023, 13:12 [IST]
Other articles published on Jun 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+