For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவிற்கு வந்த தமிழன்.. முரளி விஜய்க்கு கடைசியில் கைகொடுத்த சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

By Shyamsundar

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம்.

சென்னை அணியிடம் தற்போது 11 கோடி மீதம் இருக்கிறது. மற்ற அனைத்து அணிகளிடமும் 3 கோடி வரை மட்டும் மீதம் இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை அணி முரளி விஜய், சாம் பில்லிங்ஸ் ஆகியோரை அணியில் எடுத்து இருக்கிறது.

இல்லை

இல்லை

நேற்று ஐபிஎல் ஏலத்தில் முரளி விஜய் நேற்றுஏலம் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இவர் டெஸ்ட் பார்மெட்டில் விளையாடக்கூடிய வீரர் என்பதால் யாரும் ஐபிஎல் போட்டிக்கு எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

விஜய் எடுக்கப்பட்டார்

விஜய் எடுக்கப்பட்டார்

இந்த நிலையில் இன்று முரளி விஜய் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2 கோடி கொடுத்து முரளி விஜய் ஏலம் எடுக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணிக்குத் திரும்பியுள்ளார் முரளி விஜய்.

சாம்

சாம்

அதேபோல் சாம் பில்லிங்ஸ் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 1 கோடி கொடுத்து சாம் பில்லிங்ஸ் ஏலம் எடுக்கப்பட்டார். இவரும் நேற்று ஏலம் எடுக்கப்படவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் கீப்பர்.

மாஸ்டர் பிளான்

சென்னை அணியிடம் மதியத்திற்கு பிறகு 11 கோடி வரை இருந்தது. மற்ற அணிகளிடம் 3 கோடி வரை மட்டுமே இருக்கிறது. சென்னை அணி அதை வைத்த தற்போது பல முக்கியமான வீரர்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது.

Story first published: Sunday, January 28, 2018, 15:15 [IST]
Other articles published on Jan 28, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru yesterday and today. CSK took Bravo, Kedar Jadhav, Harbhajan Singh, Du Flesis, Shane Waston. CSK already have Dhoni, Jadeja, and Raina. CSK took lot of other state players in the team. Murali Vijay sold out to CSK in IPL auction 2018 . He sold out for 2.cr.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X