Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுத்த கும்ப்ளே... பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடறாரு அஸ்வின்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் தமிழக வீரருக்கு அணியின் கோச் கும்ப்ளே வாய்ப்பு அளித்துள்ளார்.

4வது போட்டி

4வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 4வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு

முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு

துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கிய நிலையில் மயங்க் அகர்வால் 14 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் சேத்தன் சகரியா பந்துவீச்சில் அவுட்டானார். இதனிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பின் அட்டாக்

ஸ்பின் அட்டாக்

கடந்த சீசனில் இவர் 9 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் அட்டாக்கை இந்த சீசனில் இவர் கவனித்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். அணியின் கோச் அனில் கும்ப்ளே முருகன் அஸ்வினுக்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு வழங்குவதை வழக்கமாக கொள்வார்.

அணியில் வாய்ப்பு?

அணியில் வாய்ப்பு?

ஆனால் கடந்த சீசனில் முருகன் அஸ்வினின் சிறப்பான பௌலிங், அவருக்கு தற்போது வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனை முருகன் அஸ்வின் சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் அவருக்கு இந்திய அணியிலும் அது வாய்ப்பை பெற்று தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, April 12, 2021, 20:47 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+