For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெங்களூரை ஆளப்போறான் தமிழன்.. முருகன் அஸ்வினை அரோகரா போட்டு அள்ளிய கோஹ்லி!

ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

வாஷிங்டன் சுந்தரை வாங்கிய பெங்களூரு அணி.. முருகன் அஸ்வினை அரோகரா போட்டு அள்ளிய கோஹ்லி!

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. தற்போது தமிழக வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

நேற்றே சில தமிழக வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது முருகன் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இவர் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஏனோ சென்னை அணி இவரை கேட்கவேயில்லை.

முருகன்

முருகன்

தமிழகத்தில் இருந்து கலக்குகின்ற இன்னொரு அஸ்வின் இவர்தான். 27 வயது நிரம்பிய இவர் சிறந்த ஆல்ரவுண்டர். இவரது பவுலிங் ஸ்டைலை இந்திய அணியில் இருக்கும் முன்னாள் வீரர்கள் பலர் அடிக்கடி பாராட்டி இருக்கிறார்கள். இப்போது இருக்கும் யூத் வீரர்களில் இவரும் லைம் லைட்டில் இருக்கிறார்.

வரலாறு

வரலாறு

இவர் ஐபிஎல் போட்டியில் இதுவரை பல அணிகளுக்காக ஆடி இருக்கிறார். முதலில் டெல்லி அணிக்காக ஆடினார். அதன்பின் டோணி தலைமையில் புனே அணிக்காக ஆடினார். தமிழ்நாடு ரஞ்சி அணிக்காகவும் ஆடி இருக்கிறார்.

ஏலம்

ஏலம்

இவரை எடுக்க பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் மோதிக் கொண்டது. கடைசியில் பெங்களூர் அணி இவரை 2.20 கோடி கொடுத்து எடுத்துள்ளது. இவருடைய குறைந்தபட்ச தொகை 20 லட்சம் ஆகும்.

கண்டுகொள்ளாத சென்னை

கண்டுகொள்ளாத சென்னை

இவரை சென்னை அணி எடுக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இவரை சென்னை அணி கண்டுகொள்ளவேயில்லை. இதனால் சென்னை அணியில் இளம் வீரர்களே எடுக்கப்படமாட்டார்களா என்ற சர்ச்சை எழுந்து இருக்கிறது.

Story first published: Sunday, January 28, 2018, 10:55 [IST]
Other articles published on Jan 28, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru yesterday and today. Murugan Ashwin sold out to RCB in IPL auction 2018. He sold out for 2.20cr.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+